கர்நாடகா மாநிலம் ககாட்டி கிராமத்தை சேர்ந்த சங்கர் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது மகன் ரகுவீர் PUBG விளையாடுவதை கண்டித்துள்ளார். அதனால் கோபமடைந்த ரகுவீர் வீட்டில் கலாட்டா செய்தான். ஆத்திரத்தில் பக்கத்து வீட்டு ஜன்னலையும் உடைத்தான். அக்கம்பக்கத்தினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கவே, அவர்கள் ரகுவீரை கைது செய்து ககாட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சங்கர் தன் மகனை போலீஸ் நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்கு முன்பு தன் பங்கிற்கு அடித்துக் கண்டிருத்திருக்கிறார் ஷங்கர்.
திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணியளவில், ரகுவீர் தனது மொபைல் தொலைபேசியில் PUBG விளையாடுவதை பார்த்தார் சங்கர். உடனே எரிச்சலடைந்த அவர், தனது படுக்கையறையிலிருந்து வெளியே வந்து ரகுவீரிடமிருந்து மொபைல் போனைப் பறித்தார். அதனால் ஆத்திரமடைந்த ரகுவீர் தனது தந்தை சங்கரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்குச் சென்று, அங்கிருந்த தனது தந்தையை ஒரு அரிவாளால் வெட்டினார். பின்பு அவரது கால்களில் ஒன்றையும் வெட்டினார் ரகுவீர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரகுவீரை கைது செய்தனர். வெறி அடங்காத நிலையில் ரகுவீர், தந்தையின் உடலை இன்னும் முழுமையாக வெட்டவில்லை, சிறிது நேரம் காத்திருக்குமாறு போலீசாரிடம் கூறியிருக்கிறார்.
ககாட்டி காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி போலீஸ் கமிஷனர் (ஏ.சி.பி) சிவா ரெட்டி அளித்த தகவல், ‘குற்றம் சாட்டப்பட்ட ரகுவீர் PUBG எனும் கேமை தனது மொபைல் ஃபோனில் அடிக்கடி விளையாடியுள்ளான் இதனால் மூளை மழுங்கிய அவர் அடிக்கடி வீட்டில் கோவப்பட்டு சண்டை போடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் . மேலும் திங்கள்கிழமை அதிகாலை அந்த விளையாட்டை விளையாடியதற்காக அவனது தந்தை கண்டித்த போது, கடும் கோபமடைந்துள்ளான் ரகுவீர். தந்தை என்றும் பாராமல், அறிவு மழுங்கிய நிலையில் ரகுவீர் சங்கரைக் கடுமையாகத் தாக்கி, அறிவாளால் தலை மற்றும் காலை வெட்டினான்’ என்றார்.
இந்தக் கொடூரச் சம்பவத்தால் பெற்றோர் மத்தியில் தனது பிள்ளைகளின் ஏதிர்காலம் குறித்த கவலை ஏற்பட்டுள்ளது .