கட்டி முடித்து திறப்பு விழா கண்ட சில நாட்களிலேயே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கசிவு ஏற்பட்டு, தண்ணீர் ஒழுகும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ளது பகவண்டிப்பட்டி ஊராட்சி. இப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இது மிகவும் சிதிலமடைந்த காணப்பட்டதால், பழைய நீர்த்தேக்கத் தொட்டியை இடித்துவிட்டு, புதிதாக ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கடந்த 2021 – 22-ம் ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து சுமார் 11 லட்சம் ரூபாய் நிதி ஒதுககீ்டு செய்யப்பட்டு, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இத்தொட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த சூழலில், பயன்பாட்டிற்கு கொண்டு வந்த சில நாட்களிலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கீழே கொட்டுகிறது.
இதை அப்பகுதி மக்கள் சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 11 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு திறப்பு விழா கண்ட சில நாட்களிலேயே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கசிவு ஏற்பட்டிருப்பபோது பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த மக்கள், ஆகா இதுவல்லவோ திராவிட மாடல் கட்டுமானம் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கட்டப்படும் கட்டடங்கள் பெரும்பாலும் தரமற்ற முறையில் கட்டுப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. காரணம், வகைதொகை இல்லாமல் தி.மு.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கமிஷன் கேட்பதுதான் காரணம் என்கிற குற்றச்சாட்டும் நிலவுகிறது.