பூலித்தேவனின் மனைவி மற்றும் குழந்தைகளை  உயிரோடு எரித்த கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள்

பூலித்தேவனின் மனைவி மற்றும் குழந்தைகளை உயிரோடு எரித்த கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள்

Share it if you like it

மாவீரன்  பூலித்தேவன்

பெற்றோர் : சித்திர புத்திரத்தேவர் – சிவஞான நாச்சியார்

பிறப்பு: 01/09/1715

இடம் : நெற்கட்டான் செவ்வல் (சங்கரன் கோவிலுக்கு வட மேற்கே  சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது)

மறைவு: 16/10/1767

பாரத விடுதலை வரலாற்றில் “வெள்ளையனே  வெளியேறு” என்று முதன் முதலாக ஆங்கிலேயனுக்கு எதிராக முழக்கமிட்டு விடுதலை போரைத் துவக்கியவர்.

ஆற்காடு நவாபிற்கு ஆதரவாகக் கும்பினியர்கள் திருநெல்வேலி சீமையில் வரிவசூல் செய்ய ஆரம்பித்தார்கள். ஆங்கில தளபதி கர்னல் கெரான் தலைமையில், முகமது அலியின் சகோதரன் மாபூஸ்கான், தளபதி கான்சாகிப் என்ற யூசுப்கானுடன் சேர்ந்து 500 ஐரோப்பிய வீரர்கள் , 2000 கூலிப்படைகளுடன் வந்தது.

ஆங்கிலேயர் படையுடன் தாக்க வந்த நேரடி முதல் தலையீடாகும். 1755 இல் எட்டயபுரம் , பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்கள் பணிந்து கப்பம் கட்ட ஒப்புக் கொண்ட நிலையில், நெற்காட்டான்செவல் பாளையக்காரர் பூலித்தேவன் கப்பம் கட்ட மறுத்ததால் ,ஆங்கிலப்படை நெற்காட்டான் செவல் கோட்டையை தாக்கியது. பீரங்கிகளால் அக்கோட்டையை தாக்க முடியவில்லை. நடந்த சண்டையில், தளபதி கெரான்  தோற்று  பின்வாங்கினான்.

“இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயர்களை  எதிர்த்து நடைபெற்ற போரில் பூலித்தேவன் வெற்றி  பெற்றதோடு, ‘அந்நிய ஆங்கிலேயர்களுக்கு  நாங்கள் ஏன் கப்பம் கட்ட வேண்டும்; ஒரு  சல்லிக்காசு கூட செலுத்த மாட்டோம்‘. ஒரு  மணி நெல் கூட தர மாட்டோம்‘ என்று  முழங்கியதே –இந்தியாவின் முதல் விடுதலை முழக்கம் என வரலாற்று  ஆசிரியர்கள் இராபட் ஹோம்   எச் .ஆர்.பேட்டி அவர்களது நூலும் கும்பிணியருடன் கூட வந்த ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களது  நாட்குறிப்பிலும் உள்ளது.

ஆதாரம் :கட்டுரை மலர்கள் , துணைப் பாடநூல் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு.

01/07/1755 ல் கர்னல் எரோன் கெரான் தலைமையில் கோட்டையை முற்றுகையிட்ட போது , அவர்களை விரட்டியடித்து முதல் வெற்றியைப் பெற்றார். அதே ஆண்டில், ஆங்கிலேயனின் கைக்கூலியான மாபூஸ்கானைத் தோற்கடித்தார். அதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாப்பின் தம்பியைத் தோற்கடித்தார்.  மதுரை பாளையங்கயளுடன் மேற்கு பாளையங்களான கொல்லங் கொண்டான், சேத்தூர், சொக்கம்பட்டி, தலைவன் கோட்டை, ஊற்றுமலை  முதலிய  பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாம் ஒற்றுமையுடன் போராட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார் – ஆதாரம்: திருநெல்வேலி வரலாறு – எச்.ஆர். பேட்டி.

1751 ‘வெள்ளையனே வெளியேறு ‘ என முதலில் வீர முழக்கமிட்டவர். களக்காட்டில் மாபூசுக்கானுடன்  நடந்த போரில், திருவிதாங்கூர் படைகள் பூலித்தேவனுக்கு உதவின. 1756 இல் திருவில்லிபுத்தூர்  கோட்டையில் ஆற்காடு நவாபின் தம்பி ரகீன்மத் தாக்கிய போது, பூலித்தேவனின் படையில் 1000 குதிரைபடை வீரர்கள், 25000 காலாட் படை வீரர்களை கொண்டு தாக்கி வெற்றி பெற்றான். 1759 இல் வாசுதேவநல்லூர் கோட்டையை கான்சாகிப் 18 பவுண்டு பீரங்கியை கொண்டு தாக்கியும் வெற்றி பெற முடியவில்லை.

1760-ஆம் ஆண்டு யூசுப்கான் ,நெற்கட்டும் செவல் கோட்டையை தாக்கிய போதும் ,1766 இல் கேப்டன் பௌட்சன் 12000 வீரர்களுடன் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய போதும், அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார்.

1767 இல் டொனால்டு காம்பெல் தலைமையில், மேஜர் பிலிண்ட், காப்டன் கார்பர் மற்றும் எண்ணற்ற ஆங்கில தளபதிகளுடன், வாசுதேவநல்லூர் கோட்டையைத்  தாக்கிய போது,  பராக்கிரமத்துடன் போர் புரிந்தான். ஆங்கில படை பலத்தை எதிர் கொள்ள முடியாமல், பூலித்தேவன் மேற்கு மலைத் தொடருக்கு தப்பி சென்று விட்டான். (ஆதாரம்: இவ்வரலாறு பற்றிய செய்திகளை ஆங்கில தளபதி எழுதியுள்ள  கடிதத்தில் உள்ளது. இக் கடிதம் சென்னை அரசு ஆவண காப்பகத்தில் உள்ளது ). பின்னர், நெற்காட்டான் செவல், பனையூர், வாசுதேவநல்லூர் கோட்டைகள் ஆங்கில தளபதிகளால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.

ஆங்கிலேய படையின் நவீன பீரங்கி ஆயுதங்களுக்கு முன்பாக , மன்னர் படையின் வாளும், வேலும் தாக்குப் பிடிக்காத நிலையில், ஆங்கிலேயர்கள் அவரைக் கைது செய்து பாளையங்கோட்டை கொண்டு சென்றனர். செல்லும் வழியில், சங்கரன் கோவில் இறைவனை வழிபட வேண்டுமென விரும்பினார். கும்பினிப் படையின் பலத்த பாதுகாப்போடு,  இறைவனை வழிபட்டு கொண்டிருக்கும் போது, புகை மண்டலமும் ,ஜோதியும் எழுந்தது. அதில் அவர் ஐக்கியமானார்.

பூலித்தேவராக பிறந்து, புலித்தேவராக  கொண்டாடப்பட்டு,  பூலி சிவஞானமாக ஐக்கியமான இவரே, முதல் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட மாவீரன் ஆவார். பாண்டிய நாட்டுக்கும்,  சேர நாட்டுக்கும் இடைப்பட்ட பகுதி “பூழி நாடு” என்று வழங்கப்பட்டு, பூழியர்களே பின்னாளில் பூலியர்கள் என்று அழைக்கப் பட்டனர்.மதுரை அருகிலுள்ள நாகமலைத் தொடரில், யாராலும் அடக்க முடியாத 16 அடி வேங்கைப் புலியை அடக்கி கொன்றதால் இவருக்கு ,பாண்டிய மன்னன் “ வரகுண ராம சிந்தாமணி புலித்தேவன்“ என்ற பட்டம் கொடுத்து பாராட்டியுள்ளார் .இச் செய்தி ‘மெர்கன்சி ‘ என்பவர் சேகரித்த ஓலைச்சுவடி மூலம் தெரிய வருகிறது.

‘இலஞ்சி’ சுப்பிரமணியப் புலவரிடம் தமிழோடு சன்மார்க்க நெறியையும் பயின்றார். இலக்கிய, இலக்கண நூல்களை செவ்வனே கற்று கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர். குதிரையேற்றம், யானையேற்றம், மற்போர், வாள்வீச்சு, சிலம்ப வரிசை, கவண் எறிதல் என அனைத்து போர் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்.

வலிமை மிக்க உடற்கட்டும் ,நெஞ்சும் புயங்களும் பரந்து எழில்மிகு தோற்றத்துடன் விளங்கினான். வீரமும் வலிமையும் மட்டுமின்றி, நேர்மையும் பண்பும் நிறைந்து, தெய்வீகத்தையும், தேசத்தையும்  இரு கண்களாக போற்றியவர் .

மக்கள் தொண்டு: நாள் தோறும்  ஏழை எளியோருக்கு, புத்தாடைகள் வழங்கியும், அன்னதானமும் செய்வித்த பின்னரே காலை  உணவு உண்பார்.  ஏழைகளுக்கு பொற்காசுகள்  தானமாக வழங்கியும் , இலவச திருமணங்கள் நடத்தியும், ஆங்காங்கே சத்திரங்கள் நிறுவி அன்னதான தர்மத்தையும், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று செய்து  வந்துள்ளான்.

சங்கரன்கோவில் ,கரிவலம் வந்த நல்லூர் ,வாசுதேவநல்லூர் ஆகிய  ஊர்களில் கோவில்களுக்கு முன் மண்டபம் கட்டி வைத்து, ஏராளமான அணிகலன்களையும் வழங்கினான்.

பனையூர் காட்டில் ஓலைக்குடிசையில் பூலித்தேவன் மனைவி கயல்கண்ணி நாச்சியார் மற்றும் குழந்தைகள் இருந்த போது குடிசையை ஆங்கிலேயர்கள் தீ வைத்து கொளுத்தியதில் மனைவி தீக்காயங்களுடன் இறந்து போனார். குழந்தைகள் காப்பாற்றப் பட்டனர்.

சான்றுகள்: ஆற்காடு நவாபுக்கும்,ஆங்கில கும்பினியருக்கும் அப்போதைய மாவட்ட ஆட்சியாளர்கள் 1754 முதல் பூலித்தேவன் இறுதிகாலம் வரை, அவரைப் பற்றி எழுதிய கடிதங்களும், கும்பினியர்கள் இவரைப் பற்றி லண்டனுக்கு எழுதிய கடிதங்களும், அவர்களது பதில் கடிதங்களும், இராணுவ முகாமின் ஆலோசனைகளும், முடிவுகளும் எழும்பூர் ஆவணக் காப்பகத்திலும், புதுச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிபிலும் இடம் பெற்றுள்ளன.

                              ……………………………………………………………………………………………………


Share it if you like it