தன் திறமையான நடிப்பு மற்றும் தனது தொண்டு உள்ளத்தின் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றவர் கன்னட சூப்பர் ஸ்டார் புனித்ராஜ் குமார் அவர்கள் நேற்றைய தினம் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து கொண்டு இருந்த பொழுது. திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் உள்ள அவர்களின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் பாரதப் பிரதமர் மோடி உட்பட பலர் தங்கள் ஆழ்ந்த இரங்கலை புனித் ராஜ்குமார் குடும்பத்திற்கும் அவர்களின் ரசிகர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்
கர்நாடக சிங்கம் என்று அழைக்கப்படும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையின் நேர்மை, துணிச்சலை, போற்றும் விதமாக யுவரத்னா திரைப்படத்தில் காட்சியாக வைத்து இருந்தார். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
புனித் ராஜ்குமார் எனும் சாகாப்தம் முடிவடைந்தாலும் சாகாவரம் பெற்ற அவரது சாதனைகள் பிறருக்கு போதனைகளாகட்டும்…
45 இலவசப் பள்ளிக்கூடங்கள்,
26 அனாதை ஆசிரமங்கள்,
16 முதியோர் இல்லங்கள்,
19 கோசாலைகள்,
1800 மாணவர்களின் கல்வி
கண் தானம்..