புனித் ராஜ்குமார் எனும் சாகாப்தம் முடிவடைந்தாலும் சாகாவரம் பெற்ற அவரது சாதனைகள் பிறருக்கு போதனையாக என்றும் இருக்கும் என்பது நிதர்சனம்..
45 இலவசப் பள்ளிக்கூடங்கள்,
26 அனாதை ஆசிரமங்கள்,
16 முதியோர் இல்லங்கள்,
19 கோசாலைகள்,
1800 மாணவர்களின் கல்வி
இரு கண் தானம்..
ஈரோடு மாவட்டம் கஜனூரை பூர்வீகமாக கொண்டவர் மறைந்த கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார். அவரின் அன்பு மகன் புனித் ராஜ் குமார் சென்னையில் பிறந்தவர், தனது தந்தையை போல் கன்னட திரை உலகை ஆட்சி செய்தவர். நேற்றைய தினம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம். இந்தியா முழுவதும் உள்ள அவர்களின் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும், ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் புனித் அவர்களின் உடலை புதைக்கும் காட்சியை கண்டு கோடிகணக்கான ரசிகர்கள் மற்றும் அவரின் 2 மகள்கள் கண்ணீர் வடித்த காணொலியை பிரபல ஊடகமான பாலிமர் செய்தியாக வெளியிட்டு உள்ளது.

கர்நாடகா பா.ஜ.க முதல்வர் பசவராஜ் பொம்மை இறுதி மரியாதை செய்த காட்சி….
