சுதந்திர போராட்ட வரலாற்றினை மாற்றி எழுத வேண்டும் என தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனும் மந்திர (பெயர் )சொல்லை ஒவ்வொரு இந்தியனும் இன்று வரை பெருமையுடன் உச்சரித்து வருகின்றனர். இந்தியா விடுதலை பெற வேண்டி அவர் செய்த தியாகங்கள் மற்றும் சேவைகளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இந்நிலையில், நேதாஜியின் -126-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரெளபதி முர்மு, மாநில முதல்வர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என பலர் அவரது திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ; இந்தியாவின் வரலாறு மற்றும் இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை. சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே சுதந்திர போராட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
நேதாஜி குறித்து சில குறிப்புகள் உங்கள் பார்வைக்கு…
ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்தவர். பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் உயர் கல்வி பயின்றவர். ஆன்மிகத்தில், மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் 16-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி குருவைத் தேடி அலைந்தார். எனினும், குரு அவருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து, தந்தை சொன்னபடி 1915-ல் கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தலைமையேற்று நடத்திய டயரைச் சுட்டுக் கொன்ற உத்தம் சிங்கைக் கண்டித்து காந்திஜி அறிக்கை விட்டார். ஆனால், சுபாஷ் அவரைப் பாராட்டிக் கடிதம் அனுப்பினார். காந்திஜிக்கும், நேதாஜிக்குமிடையில் மோதல் முற்ற இதுவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடதக்கது.
இவர் 1945 ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி விமான விபத்தில் 48-ஆவது வயதில் உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. எனினும், இவருடைய மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.