ஆளுநருக்கு எதிரான மனு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

ஆளுநருக்கு எதிரான மனு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

Share it if you like it

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக ஆளுநராக இருப்பவர் ஆர்.என்.ரவி. இவர், தமிழர்களின் பெருமையையும், இந்தியாவின் மேன்மையையும் தாம், கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பேசி வருகிறார். இவரது, செயல்பாடுகள் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இதனை, பொறுத்துக் கொள்ள முடியாத தி.க, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆர்.என்.ரவிக்கு எதிராக பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, இரட்டை பதவி வகிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி த.பெ.தி.க. சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை, விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

இதுகுறித்து நீதிமன்றம் கூறியதாவது ;

ஆளுநருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு  உகந்த தல்ல. குடியரசுத் தலைவரோ ஆளுநர்களோ நீதிமன்றங்களுக்கு பதில் சொல்ல கட்டுப்பட்டவர்கள் அல்ல. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அந்த மனுவை நிராகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it