நான் கட்சியில் சேர்த்துவிட்டவன் எல்லாம் மந்திரி ஆயிட்டான்: எனக்கு எதுவுமில்லையே – ஆர். எஸ். பாரதி புலம்பல்!

நான் கட்சியில் சேர்த்துவிட்டவன் எல்லாம் மந்திரி ஆயிட்டான்: எனக்கு எதுவுமில்லையே – ஆர். எஸ். பாரதி புலம்பல்!

Share it if you like it

தி.மு.க. மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது தனது உழைப்பிற்கு ஏற்ற பதவி கிடைக்கவில்லையே என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க. வழக்கறிஞர்களில் பாதி பேருக்கு நமக்கு எந்தவித பதவியும் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கும். அது நியாயமானதும் கூட, காரணம் என்னவெனில் உழைத்தவர்களுக்கு சீட் இல்லை. உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்காரும் போது அந்த வேதனை இருக்கதான் செய்யும். அதனால், நானும் அவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். நான் கட்சிக்கு அழைத்து வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ. எம்.பி. மந்திரி ஆகி விட்டார்கள். எனக்கே 63- வயதில் தான் பதவி கிடைத்தது. இதையெல்லாம் ஜீரணித்து கொண்டுதான் இந்த கட்சியில் இருக்க வேண்டும் என கதறி இருக்கிறார்.

இதனிடையே, தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் எனும் புனை பெயரில் உள்ள அப்துல் ஹமீது ஷேக் முகமது, முன்னாள் பா.ஜ.க. தலைவருக்கு கிடைக்கும் கெளரவத்தை பார்த்து விட்டு அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

மனுஷ்யபுத்திரன் முகநூல் பதிவு இதோ ;

பத்தாண்டுகளுக்கு முன்பு எனது தொலைக் காட்சி தோற்றம். அப்பல்லாம் டி-ஷர்ட்தான் அணிவேன். எல்லோரும் கேப்பாங்க ” இவ்வளவு டிஃபரண்டா எங்க வாங்குறீங்க? ” என்று. நிறைய ஃபேன்ஸ் இருந்தாங்க. ரொம்ப உக்கிரமா இருப்பேன். 2013-ல் தி.மு.க.வுக்கு வந்த பிறகு சட்டைக்கு மாறியாச்சு. அது தமிழிசை செளந்தர்ராஜனோடு கடுமையாக வாதிட்டுக்கொண்டிருந்த காலம்.

நானும் அவங்களும் வந்தா ஷோ ரொம்ப பரபரப்பா இருக்கும். நான்கு நாளைக்கு முன் சாலையில் ஐந்தாறு பாண்டிச்சேரி இனோவா போலீஸ் வண்டி வேகமாக போய்க்கொண்டிருந்ததைப் பார்த்தேன். முன்னால் தமிழிசை போய்க்கொண்டிருந்தார். இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக. நான் வழக்கம் போல ஏதோ ஒரு தொலைக்காட்சி விவாதத்திற்கு போய்கொண்டிருந்தேன். காலம் 96 ராமை மட்டுமல்ல, என்னையும் ஒரே இடத்தில் நிறுத்திவிட்டுப் போய்விட்டது. என உருக்கமாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Image

Share it if you like it