ராகுல் தண்டனையை உறுதி செய்த சூரத் நீதிமன்றம்!

ராகுல் தண்டனையை உறுதி செய்த சூரத் நீதிமன்றம்!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தண்டனையை சூரத் நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யாக இருப்பவர் ராகுல் காந்தி. இவர், கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றும் போது இவ்வாறு கூறினார் ; எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னால் மோடி பெயர் உள்ளதே அது எப்படி? என பாரதப் பிரதமர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அச்சமூகத்தை விமர்சனம் செய்து இருந்தார். இவரின், கருத்து மோடி சமூகத்தினரிடையே பெரும் கோவத்தை ஏற்படுத்தி இருந்தது.

இது தொடர்பாக, குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 23-ம் தேதி ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்ததுடன் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தது. இதையடுத்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அதிரடியாக அறிவித்தது.

இப்படிப்பட்ட சூழலில், தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார். இதனை, விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்தியின் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it