நான் நேர்மையான அரசியல்வாதி: யார் சொன்னது? அவரே சொன்னது ஆதாரம் இதோ!

நான் நேர்மையான அரசியல்வாதி: யார் சொன்னது? அவரே சொன்னது ஆதாரம் இதோ!

Share it if you like it

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன்பு ராகுல் காந்தி ஆஜராக்கி இருக்கும் இவ்வேளையில் தான் ஒரு தூய்மையான அரசியல்வாதி என ராகுல் காந்தி பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

1936- ஆம் ஆண்டு ஜவாஹர்லால் நேரு நிறுவிய நேசனல் ஹெரால்டு நிறுவனத்தின் பத்திரிக்கை வெளியீட்டாளராக அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனம் இருந்து வருகிறது. மேற்படி இரண்டு நிறுவனங்களிலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் ஓரா, ஆஸ்கார் பெர்னான்டஸ் போன்ற மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். நேசனல் ஹெரால்டு பத்திரிக்கையின் விற்பனையில் வீழ்ச்சி தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டம் காரணமாக 2008- ஆம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, நிதி இழப்பை சரிகட்டவும், தொடர்ந்து பத்திரிகை வெளியிடும் வகையில், நேசனல் ஹெரால்டு நிறுவனத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ரூபாய் 90.25 கோடி வட்டியில்லா கடன் வழங்கினார். இதுதவிர, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உறுப்பினர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம், அசோசியேட்டட் நிறுவனத்திற்கு ரூபாய் 50 இலட்சம் வழங்கியது. இதன்பின்னர், நேசனல் ஹ்ரால்டு நிறுவனம் காங்கிரஸிடம் பெற்ற கடன் தொகை ரூபாய் 90.25 கோடியை, யங் இந்தியா நிறுவனம் செலுத்திவிடுவதாகக் கூறி, ரூபாய் 1,000 கோடி மதிப்புள்ள நேசனல் ஹெரால்டு நிறுவனத்தை, யங் இந்தியா நிறுவனத்தின் பெயருக்கு மாற்றிக் கொண்டன. இதுவே சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது சுப்பிரமணியன் சுவாமி தொடுக்க முக்கிய காரணமாகும்.

அந்தவகையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தான் நேரில் ஆஜராகும் பொருட்டு துணைக்கு பிரியங்கா காந்தி, கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பேரணியாக சென்றுள்ளார். இதையடுத்து, ராகுல் காந்தி தான் ஒரு நேர்மையான அரசியல்வாதி என்ற ஒரு மாயதோற்றத்தை உருவாக்க முயல்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றன. அந்தவகையில், சி.பி.ஐ, அமலாக்கத்துறையால் என்னை எதுவும் செய்ய முடியாது என ராகுல்காந்தி தமிழகத்தில் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ராகுல் காந்தி கூறியதாவது;

என் ஒட்டு மொத்த அரசியல் வாழ்வில் நான் நேர்மையான மனிதனாக (அரசியல்வாதி) இருந்து வருகிறேன். அதானல், என்னை (பா.ஜ.க) அவர்களால் தொட முடியாது. மேலும், சி.பி.ஐ, அமலாக்கத்துறையால் என்னை எதுவும் செய்ய முடியாது. அதன்காரணமாகவே, இருபத்தி நான்கு மணிநேரமும் பா.ஜ.க.வினர் என்னை தாக்கி பேசி வருகிறார்கள். அவர்களுக்கு, நன்றாகவே தெரியும் இந்த மனிதன் ஊழல் செய்யாதவர் என்று இக்காணொளியில் பேசியுள்ளார்.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it