2024 -ல் பவர்ஃபுல் பிரதமர் வேட்பாளர் யார்?… காங்கிரஸ் எம்.பி. மாஸ் பதில்!

2024 -ல் பவர்ஃபுல் பிரதமர் வேட்பாளர் யார்?… காங்கிரஸ் எம்.பி. மாஸ் பதில்!

Share it if you like it

பிரதமர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் எம்.பி.யிடம் பிரபல ஊடக நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் திருவனந்தபுரம் எம்.பி.யுமாக இருப்பவர் சசிதரூர். இவர், பிரபல மலையாள ஊடகங்களில் ஒன்றான மாத்ரூ பூமி ஊடகத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு கூறினார் ;

நெறியாளர் ; வருகிற 2024 – ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் சக்தி வாய்ந்த பிரதமர் வேட்பாளராக யார்? இருப்பார்.

காங்கிரஸ் எம்.பி; அதில், என்ன சந்தேகம் நிச்சயமாக பிரதமர் மோடி தான் இருப்பார் என்று சிரித்தபடியே பதில் அளித்துள்ளார். இவர்தான், காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it