காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவு செய்து இருந்தார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கம் சில நாட்கள் முடக்கப்பட்டது.
இதற்கும் காரணம் பாரதப் பிரதமர் மோடி தான் என்று பிரபல நாடக குயின் கரூர் எம்.பி ஜோதிமணி உட்பட பல அறிவார்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வரும் இந்நிலையில். ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் டுவிட்டருக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக செய்த குபீர் செயல் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல்காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதை கண்டித்து ஆந்திர மாநில காங்கிரஸ் தொண்டர்கள் டிவிட்டர் நிறுவனத்தை கண்டிக்கும் வகையில்
'டிவிட்டர் பறவையை எண்ணெயில் பொறித்து' டிவிட்டர் நிறுவனத்திற்கு கொரியர் அனுப்பி வைத்தனர் pic.twitter.com/MWRgf8pZjc
— DON Updates (@Don_Updatez) August 17, 2021
டிவிட்டர் ஐ.டி.யை மோடி முடக்கினாரா? நல்ல அறிவாளியை தான் உங்கள்
தொகுதி மக்கள் தேர்ந்து எடுத்து
இருக்கிறார்கள்..
பாவம் மக்கள்— ராஜபார்வை (@MUTHUMAINTHAN) August 13, 2021