பிரதமர் மோடி எனது போனை ஒட்டு கேட்கிறார் என ராகுல் காந்தி கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யுமாக இருப்பவர் ராகுல் காந்தி. இவர், தேர்தல் நடக்கும் சமயங்களில் மட்டுமே இந்தியாவில் இருப்பார். அதன்பிறகு, அயல்நாடுகளில் சுற்றுவதையே வழக்கமாக கொண்டவர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ராகுல் காந்தி அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், அவர் கூறியதாவது : நான் என்ன பேசினாலும் பிரதமர் மோடி எனது தொலைபேசியை ஒட்டு கேட்கிறார் என கூறியிருக்கிறார்.
இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருந்தார் :
உங்களுக்கு இங்கு விவசாயம் செய்ய முடியவில்லை என்றால், அதோ தெரிகிறதே நிலா அங்கு உங்களுக்கு நிலங்களை நான் வழங்குவேன். நீங்கள் உருளை கிழங்குகளை அங்கு பயிர் செய்யலாம். அதனை, குஜராத்தில் விற்பனை செய்து மகிழ்ச்சியுடன் வாழலாம் என ராகுல் காந்தி பேசியதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணொளி ஒன்று வெளியாகி இருந்தது. இக்காணொளியை, பாகிஸ்தானை சேர்ந்த பிரபல அரசியல் விமர்சகர், எழுத்தாளர் என பன்முகதன்மை கொண்ட ஆரிஃப் ஆஜாகியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.