நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் – ரவிசங்கர் பிரசாத் கருத்து!

நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் – ரவிசங்கர் பிரசாத் கருத்து!

Share it if you like it

பணமதிப்பிழப்பு தொடர்பாக அவதூறு பரப்பிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2016 – ஆம் ஆண்டு நவம்பர் 8 -ம் தேதி அன்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பாரதப் பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என இந்திய அரசு தெரிவித்து இருந்தது. அதன் பொருட்டு, இந்திய ரிசர்வ் வங்கி 500, 1,000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து, பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத் தாள்களில் 99.3% மீண்டும் வங்கிகளுக்கே திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் சில உதிரி கட்சிகள் பணமதிப்பிழப்பு தொடர்பாக வழக்கு தொடர்ந்தன. இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், நாட்டின் நன்மையை கருதி எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியிருந்தனர்.

இதனை தொடர்ந்து, பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது ; ”பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தவர் ராகுல் காந்தி. வெளிநாடு சென்றபோது அங்கும் கூட அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரிடம் நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். இப்போது நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா?

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பணபரிவர்த்தனை மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. கடந்த 2022 – ஆம் ஆண்டு அக்டோபரில் மட்டும் சுமார் ரூ.12 லட்சம் கோடி ரூபாய் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை நடந்துள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா முன்னோடி நாடாக திகழ்ந்து வருகிறது. ஏழை மக்களும் கூட டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். பணமிப்பிழப்பு நடவடிக்கைக்கு கிடைத்த பலன் இது.

இதேபோல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாத நடவடிக்கைகள் பெரும்பாலும் குறைந்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் கல் எரியும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பவர்கள் முடக்கப்பட்டுள்ளார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு மிகப் பெரிய அடி” என அவர் தெரிவித்துள்ளார்.


Share it if you like it