ராஜ ராஜ சோழனை இந்துவாக காட்ட முயற்சி நடைபெறுகிறது – வெற்றிமாறன்  குற்றச்சாட்டு!

ராஜ ராஜ சோழனை இந்துவாக காட்ட முயற்சி நடைபெறுகிறது – வெற்றிமாறன் குற்றச்சாட்டு!

Share it if you like it

ராஜ ராஜ சோழனை ஹிந்துவாக காட்ட முயற்சி நடப்பதாக திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கும் கருத்து தற்போது பேசுப்பொருளாக மாறியிருக்கிறது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவை முன்னிட்டு அவரது குறும்பட வெளியிட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ், திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் வி.சி.க.வை சேர்ந்த முன்னணி தலைவர்கள் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, பேசிய வெற்றிமாறன் இவ்வாறு கூறினார். 

திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்த விளைவு தான், தமிழ்நாடு இன்று வரை மதசார்பற்ற மாநிலமாக இருந்து வருகிறது. வெளியில் இருந்து வரும் பல சக்திகளின் அதிகாரத்தை இது தடுக்கும் பக்குவம் கொண்ட மாநிலமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். சினிமாவை அரசியல் மையத்திற்குள் கொண்டு வருவது மிகவும் அவசியம். நடுவில் இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் இல்லாமல் இருந்தது. இப்போது, திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்துள்ளது.

மக்களுக்காக தான் கலை மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும். இந்த கலையை சரியாக கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிடில், வெகு விரைவில் நம்மிடமிருந்து பல அடையாளங்களை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை அணிவது ஆகட்டும். ராஜ ராஜ சோழன் ஒரு ஹிந்து அரசனாக காட்ட முயற்சி நடைபெறுகிறது. இது தொடர்ந்து, தமிழ் சினிமாவிலும் காட்ட முயற்சி நடைபெறும் என கூறியிருக்கிறார்.

ராஜ ராஜ சோழன் தீவிர சிவ பக்தன் என்பது உலகம் அறிந்த உண்மை. அவர், ஒரு ஹிந்து மன்னர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. உண்மை இவ்வாறு இருக்க, இதையெல்லாம் மறைத்து விட்டு ராஜ ராஜ சோழனை ஒரு ஹிந்து அரசனாக காட்ட முயற்சி நடைபெறுவதாக வெற்றிமாறன் பேசியிருப்பதன் மூலம் அவரது உண்மையான சுயரூபம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திருவள்ளுவர் ஒரு இஸ்லாமியர் கோதாவில் குதித்த தடா ரஹிம்…!

Share it if you like it