ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஏளனம் செய்தார்கள் – காங் கட்சியில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளுப் பேரன் குற்றச்சாட்டு

ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஏளனம் செய்தார்கள் – காங் கட்சியில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளுப் பேரன் குற்றச்சாட்டு

Share it if you like it

ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஏளனம் செய்தார்கள் – காங் கட்சியில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளுப் பேரன் குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து C R கேசவன் விலகியுள்ளார். இவர் முன்னாள் முதல்வர் ராஜாஜியின் கொள்ளுப் பேரன்.


ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் துணை தலைவர், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் , தேசிய செய்தி தொடர்பாளர் என பல்வேறு பொறுப்புக்களில் இருந்துள்ளார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார், அந்த கட்சி அடிப்படை சித்தாந்தத்தில் இருந்து விலகி விட்டதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


திரவுபதி முர்முவை பாஜக,  குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவித்தப் போது, ஒரு காங்கிரஸ் தலைவர், திரவுபதி முர்மு ஒரு தீய சித்தாந்தத்தில் இருந்து வருபவர் என்றும், இவரை போன்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள், எந்த நாட்டின் அதிபராகவும் வரக்கூடாது என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.  இது அதிர்ச்சி அளித்ததாகவும், இதனால் தான் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திராவில் பங்கேற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார் .


மேலும் ஜனவரி 23 அன்று, பிரதமர் அந்தமானில் உள்ள 21 தீவுகளை பரம்வீர் சக்ரா வீரர்கள் பெயரில் அறிவித்தார் , ஆனால் காங்கிரஸோ ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கு ஆதாரம் கேட்கிறது. ராணுவத்தை அவமதிக்கிறது.


இவை சில உதாரணங்களே , இது போல தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. இனியும் இதில் இருப்பது தவறு என்று முடிவெடுத்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக கேசவன் தெரிவித்துள்ளார்.


Share it if you like it