ராஜஸ்தான் பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு… காங்கிரஸுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி பொளேர்..!

ராஜஸ்தான் பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு… காங்கிரஸுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி பொளேர்..!

Share it if you like it

தனக்கே இங்கு பாதுகாப்பு இல்லை என்று ராஜஸ்தான் மாநில பெண் எம்.எல்.ஏ. கூறி வெளியிட்டிருக்கும் வீடியோவை சுட்டிக்காட்டி இருக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், இந்த லட்சணத்தில் பெண்கள் பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கட்சி பேசுகிறது என்று வெளுத்து வாங்கி இருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் செராய் கிராமத்தில் 6 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் ஜோத்பூரின் ஓசின்யா எம்.எல்.ஏ. திவ்யா மடேர்னா பேச முயன்றபோது, சபாநாயகர் சிபி ஜோஷி தடுத்து நிறுத்தி விட்டார். இதனால், கோபமடைந்த அவர், வெளியே வந்து தனது சொந்த அரசாங்கத்தையே கடுமையாக தாக்கி பேசினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “ஜோத்பூரில் வாழவே பயமாக இருக்கிறது. நான் 2 முறை தாக்கப்பட்டிருக்கிறேன். அங்கு யாரும் பாதுகாப்பாக இல்லை. நான் இங்கு பாதுகாப்பாக இல்லை. குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. நான் போலீஸ் பாதுகாப்பில் பயணித்த போதிலும் எனது கார் 20 இடங்களில் தாக்கப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு, எனக்கு மிரட்டல் வந்தது. எனது பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் எனது காரை நிறுத்திவிட்டு, நான் தாக்கப்படலாம் என்று எஸ்.பி.யிடம் கூறினேன். ஆனால், உரிய ஏற்பாடுகள் இருப்பதாக எஸ்.பி. உறுதியளித்தார். இருந்தபோதும், நான் தாக்கப்பட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “ராஜஸ்தானில் காங்கிரஸின் காட்டு மிராண்டித்தனமான ஆட்சியில் எளிய பெண்களைகூட விடுங்கள், அவர்களது சொந்த கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு கூட பாதுகாப்பில்லை. இது வெட்கக்கேடானது” என விமர்சித்திருந்தார். இந்த நிலையில், தற்போது இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. திவ்ரா மடேர்னா, ராஜஸ்தானில் தான் பாதுகாப்பாக இல்லை என்று கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் பெண்கள் மட்டுமல்ல பெண் எம்.எல்.ஏ.க்களின் நிலையும் இதுதான். இது பெண்களின் பாதுகாப்பு பற்றிய காங்கிரஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதிகளை அம்பலப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டிருக்கும் அவர், காங்கிரஸ் கூட்டணியை குறிப்பிட்டு உனக்கு கேட்கிறதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.


Share it if you like it