பிரதமருக்கு கொலை மிரட்டல்: அடிப்படைவாதிகள் திமிர்!

பிரதமருக்கு கொலை மிரட்டல்: அடிப்படைவாதிகள் திமிர்!

Share it if you like it

ராஜஸ்தானில் ஹிந்து டெய்லர் கழுத்தை அறுத்து கொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கும் விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு விஹெச்.பி. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட ஹிந்து மதத்தைச் சேர்ந்த டெய்லர் கன்னையா லால் என்பவரை, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் நேற்று காலை கழுத்தை அறுத்துக் கொலை செயதனர். இதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். மேலும், மற்றொரு வீடியோ வெளியிட்டிருக்கும் பயங்கரவாதிகள், பாரத பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இதற்குத்தான் வி.ஹெச்.பி. உள்ளிட்ட ஹிந்து மத அமைப்புகளும், ஹிந்துக்களும், தேச நல விரும்பிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் அலோக் குமார் வெளிட்டிருக்கும் அறிக்கையில், “உதய்பூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய ஒரு சந்தையில், பட்டப்பகலில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒரு நபரை ஜிகாதிகள் படுகொலை செய்து, அதை வீடியோவும் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். இதன் பிறகு, பயங்கரவாதிகள் வெளியிட்ட வீடியோவில், கத்தியுடன் தோன்றி, பாரத பிரதமருக்கே மிரட்டல் விடுக்கிறார்கள். இது இந்தியாவின் இறையாண்மைக்கும், கருத்து சுதந்திரத்திற்கும், மத சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகும். இந்த சவாலை விஷ்வ ஹிந்து பரிஷத்தும், நாட்டு மக்களும், மத்திய அரசும் ஏற்று ஒன்றாக முறியடிப்போம். எந்த நெறிகள் நாட்டை முன்னேற்றியதோ, அதே நெறிகள் கொண்டு வெற்றி பெறுவோம். மேலும், இதன் மூலம் நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது .ஆகவே, அவர்களுக்கும், அவரகளது குடும்பங்களுக்கும் தீவிர பாதுகாப்பு அளிக்க அரசை கேட்டு கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இச்சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி, “ஹிந்துஸ்தானில் உண்மையான ஹிந்துக்களால் வாழவே முடியாது என்பது போன்ற சூழல் உருவாகி வருகிறது. அப்படி வாழ வேண்டுமென்றால், அவர் நகர்ப்புற நக்சலாக இருக்க வேண்டும் அல்லது இருப்பதே தெரியாமல் இருக்க வேண்டும். அப்படியும் இல்லையெனில், அவர் இறந்திருக்க வேண்டும். தற்போது ராஜஸ்தானில் நிகழ்ந்த கொலைக்காக இந்தியாவிடம் கத்தார் நாடு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, கன்னையா கொலை என்னை மூர்ச்சையாக்கி விட்டது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கிறார். இச்சம்பவம் குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “ஒரு மனிதனை ஜிகாதிகள் கொடூரமாக கொலை செய்துவிட்டு, அந்த வீடியோவையும் வெளியிடுகின்றனர். கடவுளின் பெயரால்… என்று கோஷமிட்டப்படி அந்த மனிதரை அவர்கள் கொலை செய்கின்றனர். இந்த வீடியோக்களை பார்க்க எனக்கு தைரியம் இல்லை. நான் மூர்ச்சையாகி விட்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

https://twitter.com/amitmalviya/status/1541766823804149760

Share it if you like it