ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 45 லட்சம் டன் லட்டு தயாரிப்பு பணி தீவிரம் !

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 45 லட்சம் டன் லட்டு தயாரிப்பு பணி தீவிரம் !

Share it if you like it

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. விழாவிற்கான வேத சடங்குகள் ஜனவரி 16ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் விருந்தினர்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இதற்காக சுமார் 45 லட்சம் டன் லட்டு தயாரிக்கப்படுகிறது.

உத்தரப்பிரேசம் மற்றும் குஜராத்தை சேரந்த சமையல் கலைஞர்கள் ஜனவரி 6ஆம் தேதி முதல் லட்டு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி 22ஆம் வரை நடைபெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். சுத்தமான நெய்யில் லட்டு தயாரிக்கப்படுவதாகவும், ஒரு நாளில் சுமார் 1,200 கிலோ லட்டு தயாரிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


Share it if you like it