ஊடக நெறியாளர் பாண்டே மதம் மாற வற்புறுத்திய காலேஜ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல சாணக்கிய இணையதள ஊடகத்தின் நிறுவனர் பாண்டே. இவர், பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர், தமிழகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட நபராக இருந்து வருகிறார். இதுதவிர, இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இப்படிப்பட்ட சூழலில், பாண்டே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பாண்டேவின் பதிவில், சென்னையின் ஒரு கல்லூரியில் என் நண்பர் தன் மகளுக்கு சீட் கேட்டபோது, பெற்றோரின் மதம் கேட்கப்பட்டது. சொன்னதும், மாறும் விருப்பம் கேட்கப்பட்டது. மறுத்ததும், ஒருவரேனும்? எதிர்காலத்தில்? என கேள்விகள். இல்லை என உறுதியாக நிற்கவும் சீட்டும் இல்லை என உறுதியாக மறுத்துவிட்டார்கள். இது எல்லா கல்லூரியிலும் எல்லா நாளும் நடப்பதாகச் சொல்லவில்லை. ஒரு கல்லூரியில் ஒரு மனிதருக்கு நடந்ததை மட்டுமே சொல்கிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார்.