தனி திராவிடநாடு கேட்டவர் ஈரோடு வெ.ராமசாமி: ஆதாரங்களை அடுக்கிய பாண்டே!

தனி திராவிடநாடு கேட்டவர் ஈரோடு வெ.ராமசாமி: ஆதாரங்களை அடுக்கிய பாண்டே!

Share it if you like it

சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் ஈரோடு வெ.ராமசாமியின் பங்கு என்ன? என்று கேள்வி எழுப்பி இருக்கும் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, தனி திராவிடநாடு கேட்டவர் அவர் என்பதை புட்டுப்புட்டு வைத்திருக்கிறார். இந்த காணொளிதான் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

பாரத தேசத்தின் 73-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நாட்டின் விடுதலைக்காக தங்களை மெழுகாக உருக்கிக் கொண்ட தியாகிகளை நினைவுகூரும் விதமாக, அனைத்து மாநிலங்களும் குடியரசு தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடின. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ‘இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கக் கூடாது. வெள்ளையர்கள் நாட்டை விட்டு போகக் கூடாது’ என்று வெள்ளையர்களின் பாதத்தை பிடித்து கதறிய ஈரோடு வெ.ராமசாமியை குடியரசு தின விழாவில் கொண்டாடி தீர்த்திருக்கிறது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு. அதாவது, குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்தியில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இணையாக ஈரோடு வெ.ராமசாமியின் உருவத்தையும் பதித்திருந்தது. இதுதான் பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்பு கோஷங்களும் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில்தான், பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ரங்கராஜ் பாண்டே, சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் ஈரோடு வெ.ராமசாமி பங்கேற்கவே இல்லை என்பதையும், வெள்ளையருக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதையும், தனி திராவிட நாடு கேட்டதையும் புட்டுப்புட்டு வைத்து ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன் லிங்க் இதோ…


Share it if you like it