மராத்திய மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற நாக்பூர் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பாடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய வரலாற்றை நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பல்வேறு மாநிலக் கட்சிகளின் வரலாறு மற்றும் ராம் ஜென்ம பூமி வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக் கழக வரலாற்று துறை வாரியம் இந்த புதிய பாடத்திட்டத்தை சேர்க்க ஒப்புதல் வழங்கி உள்ளது. முதுகலை மற்றும் வரலாற்றுப் படிக்கும் மாணவர்களுக்கு நான்காவது செமஸ்டர்லிருந்து இதனை நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.