கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஒரு ஹிந்து ஆலயத்தை அங்குள்ள அடிப்படைவாத இஸ்லாமியர்கள் பெரும் திரளாக கூடி இடித்து தரைமட்டமாக்கி, தீ வைத்தனர் இவ்விவகாரம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில்
பாகிஸ்தானில், உள்ள புரானா கிளா (பழமையான கோட்டை) எனும் இடத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த சிவன் ஆலயம் ஒன்றில் நேற்று இரவு புகுந்த மர்மநபர்கள் கோவிலின் படிக்கட்டுகள், கதவுகளை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் அந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் ஹிந்துக்கள் தான் ஆனால் ஹிந்துக்கள் சிறுபான்மை ஆகி மாற்று மதத்தினர் பெரும்பான்மையானதால் தான் இந்த அவலங்கள் தொடர்கிறது. இது போன்ற விஷயங்களில் உலகநாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வளர்கள் மற்றும் அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.