மத சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம்: இந்தியா முதலிடம்… இங்கிலாந்து 54, அரபு அமீரகம் 61-வது இடம்!

மத சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம்: இந்தியா முதலிடம்… இங்கிலாந்து 54, அரபு அமீரகம் 61-வது இடம்!

Share it if you like it

மத சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக கொள்கை பகுப்பாய்வு மையம் (சி.பி.ஏ.) தெரிவித்திருக்கிறது.

உலக நாடுகளை பொறுத்தவரை, இந்தியா மட்டுமே மத சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. கலாசாரமாகட்டும், கல்வியாகட்டும், மொழியாகட்டும் அனைத்திலும் மத சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்கான திட்டங்களையும், விதிகளையும் இந்தியா கொண்டிருக்கிறது. அதேசமயம், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட எந்த ஜனநாயக நாடுகளிலும் இப்படியொரு திட்டங்களோ விதிகளோ இல்லை என்று உறுதியாகக் கூறலாம். ஆனால், இந்தியாவில் இருக்கும் அடிப்படைவாத மத சிறுபான்மையினர், இந்தியாவில் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்று நீலிக் கண்ணீர் வடித்து வருகின்றனர். தவிர, அமீர்கான், ஷாருக்கான் போன்ற அடிப்படைவாத பிரபலங்கள், இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்றெல்லாம் வாய்கூசாமல் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கம் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்திருக்கிறது. உலகளவில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது தொடர்பாக, கொள்கை பகுப்பாய்வு மையம் (சி.பி.ஏ.), இந்தியா உள்ளிட்ட 110 நாடுகளில் ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது அறிக்கையாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையில்தான் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. இதுதொடர்பாக கொள்கை பகுப்பாய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத சிறுபான்மையினருக்கு அதிக முக்கியத்துவத்தை இந்தியா அளிக்கிறது. அந்த வகையில், இந்த வரிசையில் இந்தியா முதலிடத்தை பெற்றிருக்கிறது.

கலாசாரம் மற்றும் கல்வியில் மத சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்காக குறிப்பிட்ட மற்றும் பிரத்யேகமான விதிகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொண்டிருக்கிறது. வேறு எந்த நாட்டின் அரசியலமைப்பிலும் மொழி வழி மற்றும் மத சிறுபான்மையினரை மேம்படுத்துவதற்கான வெளிப்படையான விதிகளோ, திட்டங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, அடுத்தடுத்த இடங்களில் தென் கொரியா, ஜப்பான், பனாமா ஆகிய நாடுகள் இருக்கின்றன. கடைசி இடங்களில் அமெரிக்கா, மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. இங்கிலாந்து 54-வது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் 61-வது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் சிறுபான்மைக் கொள்கையானது பன்முகத்தன்மையை மேம்படுத்துவதை வலியுறுத்தும் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. எனவேதான், இந்தியாவுக்கு இந்த வரிசையில் முதலிடம் கிடைத்திருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் சிறுபான்மைக் கொள்கையை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யவும் மறு ஆய்வு செய்யவும் சி.பி.ஏ. அறிக்கை வலியுறுத்துகிறது.


Share it if you like it