ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி: எதிர்ப்பாளர்கள் முகத்தில் கரி!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி: எதிர்ப்பாளர்கள் முகத்தில் கரி!

Share it if you like it

எதிர்ப்பாளர்களின் முகத்தில் கரியைப் பூசும் விதமாக, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று சீருடை அணிவகுப்பு நடத்துவதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வழக்கமாக வைத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீர் உட்பட நாடு முழுவதும் இந்த அணிவகுப்பு நடந்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் நடந்திருக்கிறது. இந்த சூழலில், நிகழாண்டு விஜயதசமியை முன்னிட்டு காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முடிவு செய்தது. எனவே, அணிவகுப்புக்கு அனுமதி வேண்டி தமிழக காவல்துறையில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு செப்டம்பர் 28-ம் தேதிக்குள் அனுமதி வழங்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதியளித்த உயர் நீதிமன்றத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் விமர்சனம் செய்ததோடு, அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். திருமாவளவன் ஒருபடி மேலே போய், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்ய முடியாது. ஆகவே, திருமாவளவனின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. வேண்டுமானால் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி, தள்ளுபடி செய்து விட்டது. இதனால் மூக்குடைபட்ட திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு போட்டியாக, சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தார். இதற்கு நாம் தமிழர், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்புக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. அதேபோல, திருமாவளவனின் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு காரணமாக, பி.எஃப்.ஐ. அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதை காரணமாகக் காட்டி இருந்தது. ஆகவே, திருவள்ளூர் எஸ்.பி., நகர காவல் ஆய்வாளர், தமிழக டி.ஜி.பி., உள்துறை செயலாளர் ஆகியோருக்கு கோர்ட் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனிடையே, அணிவகுப்புக்கு அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தை மீண்டும் நாடியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நவம்பர் 6-ம் தேதி அணிவகுப்பு நடத்திக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும், கோர்ட் அவமதிப்பு வழக்கை அக்டோபர் 31-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது தங்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுகிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. இதன் மூலம் எதிர்ப்பாளர்களின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது.


Share it if you like it