வீடு கட்ட ரூ.2 லட்சம் லஞ்சம்: தி.மு.க. செயலாளர் மீது கலெக்டரிடம் மூதாட்டி புகார்!

வீடு கட்ட ரூ.2 லட்சம் லஞ்சம்: தி.மு.க. செயலாளர் மீது கலெக்டரிடம் மூதாட்டி புகார்!

Share it if you like it

குடிசை வீட்டை இடித்து விட்டு ஆஸ்பெஸ்டாஸ் வீடாக மாற்றி கட்டுவதற்கு தி.மு.க. செயலாளர் 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக, மூதாட்டி ஒருவர் கலெக்டரிடம் புகார் அளித்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் மாட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஆராயி மற்றும் பிரியா. சகோதரிகளான இருவருமே கணவரால் கைவிடப்பட்டவர்கள். இதில் பிரியா மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், சகோதரிகள் இருவரும் அப்பகுதியில் இருக்கும் நத்தம் புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்டி, கடந்த 20 வருடங்களாக தங்களது குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். தற்போது, அவர்களது மகள்களுக்கும் திருமணமாகி விட்ட நிலையில், இடப் பற்றாக்குறை காரணமாக குடிசை வீட்டை இடித்து விட்டு, ஆஸ்பெஸ்டாஸ் வீடு கட்ட முடிவு செய்தனர். அதன்படி, குடிசை வீடு இடிக்கப்பட்டு தற்போது செங்கல் வைத்து ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க. வார்டு செயலாளராக இருக்கும் குழந்தைவேல் என்பவர், மேற்கண்ட இடம் புறம்போக்கு நிலம் என்றும், இங்கு விளையாட்டு மைதானம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அப்படி வீடு கட்ட வேண்டுமானால் தனக்கு 2 லட்சம் ரூபாய் லஞ்சமாகத் தரவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். ஆனால், பணம் தர முடியாத சூழலில் இருக்கும் ஆராயி மற்றும் மாற்றுத் திறனாளி பிரியா ஆகியோர், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் துணிச்சலாக புகார் கொடுத்திருக்கிறார். அப்புகாரில், தி.மு.க பிரமுகர் குழந்தைவேல் வீடு கட்ட இடையூறு செய்வதாகவும், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it