ஜி 20 மாநாட்டில் சபை நிறைக்கும் நடராஜர் சிலை  உலகெங்கும் ஓங்கி ஒலிக்கும் சனாதன தர்மம்

ஜி 20 மாநாட்டில் சபை நிறைக்கும் நடராஜர் சிலை உலகெங்கும் ஓங்கி ஒலிக்கும் சனாதன தர்மம்

Share it if you like it

சர்வதேச அளவில் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி 20 அமைப்பின் மாநாடு இந்த முறை பாரதத்தின் தலைமையில் தலைநகரம் புது தில்லியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டிற்கான விசேஷ பூர்வாங்க மாநாடுகள் சென்னை பாண்டிச்சேரி பெங்களூர் உள்ளிட்ட தென் மாநிலங்கள் தொடங்கி குஜராத் ராஜஸ்தான் என்று நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சிறு சிறு முன்னோட்ட நிகழ்வுகளாக நடந்தேறியது. செப்டம்பர் மாதம் இறுதியில் இந்த ஜீ – 20 மாநாட்டின் உச்சி மாநாடு தலைநகர் புது தில்லியில் பாரதத்தின் குடியரசு தலைவர் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று ஜி 20 மாநாடுகள் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி புது தில்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்திற்குப் பிறகு ஸ்திரமாக நிற்கும் பாரதத்தின் பொருளாதாரம். சந்திராயன் மூன்று வெற்றி .சூரியனுக்கான ஆதித்யா எல் ஒன் வெற்றிப் பயணம். உலக பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய பாரதம். முப்படைகளின் பாதுகாப்பு நவீன தளவாட உபகரணங்கள் என்று அனைத்து விஷயங்களிலும் வல்லரசுகளுக்கே கடும் போட்டி கொடுக்கும் வகையில் முன்னேறி செல்லும் காலகட்டத்தில் நடைபெற இருக்கும் இந்த ஜி20 மாநாடு சர்வதேச நாடுகளின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் உருவாக்கி இருக்கிறது.

கொரோனா காலத்தில் தடுப்பு மருந்து உள்ளிட்ட உயிர் காக்கும் விஷயங்களில் கூட மலிவான அரசியல் செய்ய முயன்ற பல நாடுகளுக்கு பாடம் புகட்டும் விதமாக குறைந்த விலையில் கொரோனா தடுப்பு மருந்துகளை உலகின் பல்வேறு நாடுகளுக்கு பாரதம் வழங்கியது. பெரும் பொருளாதார சிக்கலில் இருந்த சிறிய நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் தாமாக முன்வந்து கொரோனா மருந்துகள் உணவுப் பொருட்கள் அத்தியாவசிய உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை அன்பு பரிசாக பழகியது. அந்த வகையில் உலகம் துயருறும் நிலையில் தாமாக முன்வந்து அவர்களை அரவணைக்கும் தாய்பூமியாக பாரதம். மிளிர்கிறது. அன்போடு உலகை வழி நடத்தும் பாரதத்தின் அடுத்தடுத்த வெற்றிகளும் அதன் மூலமான நன்மைகளும் இந்த ஜி 20 மாநாட்டின் மூலம் வளரும் நாடுகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் எப்படிப்பட்ட பங்களிப்பை வழங்க இருக்கிறது ? அதற்கான எந்தவிதமான திட்டங்கள் வரைவுகளை பாரதம் வைத்திருக்கிறது? என்பதை எல்லாம் உலகிற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் ஒரு மேடையாகவே இந்த ஜி 20 மாநாட்டை வளரும் நாடுகளும் வல்லரசு நாடுகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறது .

அதே நேரத்தில் பாரதத்தின் இந்த அசுர வளர்ச்சியை நீடித்த நிலையான முன்னேற்றத்தை விரும்பாத பகை நாடுகள் இந்த மாநாட்டின் மூலமாக பாரதத்தின் தற்சார்பு வளர்ச்சிக்கும் சர்வதேச பங்களிப்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்த விதமான எதிர் நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது? அதன் மூலம் சர்வதேச அளவில் பாரதத்திற்கு எதிராக ராஜ்ய ரீதியான காய் நகர்த்தல்கள் என்ன ? என்பதை பாரதமும் சர்வதேச நாடுகளும் வெளிப்படையாக அறிந்து கொள்ள இருக்கும் ஒரு சதுரங்க களமாகவும் இந்த ஜி 20 மாநாடு இருக்கும். அந்த வகையில் பாரதத்தின் உள்துறை வெளியுறவுத்துறை பாதுகாப்புத் துறையும் இந்த மாநாட்டை ஆவலோடு எதிர்நோக்குகிறது.

தொடர்ச்சியான உள்நாட்டு பொருளாதார குழப்பங்களால் கடும் அரசியல் நெருக்கடியால் சிக்கி திவாலாகும் நிலைமையில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அண்டை நாடுகள். பாரதத்தின் உதவி நேரடியாகவோ மறைமுகமாகவோ இருந்தால் மட்டுமே மீண்டெழ முடியும் என்ற நிலையில் இருக்கும் நாடுகளும் அவர்களின் தேவைகள் கோரிக்கைகளை முன் வைக்கும் ஒரு சபை கூடுகையாகவும் இந்த மாநாட்டை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த ஜி 20 மாநாட்டை பல்வேறு நாடுகள் மொழிகள் இனம் சார்ந்தவர்கள் அவர்களின் கலாச்சார அடையாளங்களோடு அவரவர் நாட்டின் பண்பாட்டு பாரம்பரிய வாழ்வியலை கௌரவப்படுத்தும் வகையில் இதில் அரங்கங்கள் மேடை நிகழ்வுகள் இடம்பெறும். அதே நேரத்தில் இந்த மாநாட்டை முன் நின்று நடத்தும் பாரதம் இதில் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பாரதத்தின் சுதேச நாடாளுமன்ற வளாகம் கட்டிட திறப்பு விழா முடிந்த நிலையில் அதற்கென்று இருக்கும் பாரத மண்டபம் என்னும் பிரத்தியேக மஹாலில் இந்த ஜி 20 மாநாட்டுக்கான அமர்வு முன்னெடுக்கப்படுகிறது . சுதந்திர பாரதத்தில் ஒரு சர்வதேச நிகழ்வை பெருமிதத்தோடும் தன்னுடைய பாரம்பரிய அடையாளம் அதிகாரத்தோடும் பாரதம் முன்னெடுக்கும் முதல் நிகழ்வு இதுவே.

இதுவரையில் விளையாட்டுப் போட்டிகள் – போர் பயிற்சிகள் என்று பரவலான நிகழ்சிகளை மட்டுமே பாரதம் தன்னகத்தில் நடத்தி இருக்கிறது. அதற்கான அனுமதியும் நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதிலுமே சர்வதேச அளவிலும் உள்ளூர் அளவிலும் பெரும் நெருக்கடிகளை பாரதம் கடந்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த 9 ஆண்டு காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்று வரும் பொருளாதாரம். சர்வதேச அளவில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து நிற்கும் பாரதத்தின் ராஜ்ய உறவுகள். வலுப்பட்டு வரும் உள்நாட்டு பாதுகாப்பு என்று எந்த விதமான குறைகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடமின்றி தனித்துவத்தோடு உயர்ந்து நிற்கும் பாரதம். இன்று இந்த ஜி 20 மாநாட்டை தன்னிச்சையாக தனது தேசத்தின் தலைநகரில் பெருமிதத்தோடு முன்னெடுக்கிறது. ஒரு நாடும் மக்களும் துணிச்சலோடும் தங்களின் பாரம்பரிய வாழ்வியலில் நேர்மையான வழியில் நடைபெற்றால் எத்தகைய வல்லரசு நாடுகளும் கூட நம்முடைய தர்மத்திற்கும் துணிச்சலுக்கும் நேர்மைக்கும் மரியாதை கொடுத்து ஒதுங்கி வழிவிடும் என்பதற்கு இந்த ஜி 20 மாநாடு ஒரு பெரும் சாட்சியம்.

அந்த வகையில் ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு கூட அனுமதி பெற ஒரு பிரயத்தனம். அனுமதி பெற்று வந்த விளையாட்டுப் போட்டிகளில் பெரும் ஊழல் என்று சர்வதேச அளவில் தலை குனிந்து வந்த பாரதம் இன்று ஜி 20 மாநாட்டை தன்னிச்சையாக முன் நின்று தலைநகரில் நடத்தும் அளவில் வளர்ந்து நிற்பது சாதாரண விஷயம் அல்ல . இந்த வளர்ச்சிக்கும் உறுதிப்பாட்டிற்கும் பின்னால் பிரதமர் அமைச்சரவை சகாக்கள் தொடங்கி பாதுகாப்பு முறைமைகள் உளவுத்துறை அமைப்புகள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடங்கி கடைக்கோடி சாமானியன் வரையில் பல கோடி இந்தியர்களின் பெரும் உழைப்பும் அர்ப்பணிப்பும் இதன் பின்னணியில் இருக்கிறது . இதை உணர்ந்து சர்வதேச சமூகம் பாரதத்தின் வளர்ச்சிக்கும் பங்களிப்பிற்கும் உரிய கௌரவத்தை வழங்கும் வகையில் ஜி 20 மாநாட்டை பாரதத்தின் தலைநகரில் நடத்த ஒத்துழைப்பு கொடுத்ததோடு பெருமிதத்தோடு அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள தயாராகி வருகிறார்கள்.

உலகமே உற்று நோக்கும் ஒரு சர்வதேச மாநாடு அதிலும் வளரும் நாடுகளின் சமூக பொருளாதார அரசியல் சிக்கல்களை வெளிப்படையாக பேசவும் அதன் காரணங்களை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன் வைப்பதற்குமான ஒரு பெரும் சர்வதேச ராஜ்யம் மேடையாக இருக்கும் அந்த ஜி 20 மாநாட்டில் சபை நாயகமாக இந்த தேசத்தின் ஆன்மீகத்தின் அறிவியலின் அடையாளமாக பனிமலையில் உறையும் சிவபெருமானின் நடராஜர் தாண்டவர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது தனி சிறப்பு.

ஆணும் பெண்ணும் சமம் என்னும் சம நீதி. பஞ்ச பூதங்களும் தன்னுள் அடக்கம் என்ற பிரபஞ்ச நீதி என்று பல்வேறு ஆன்மீக அறிவியல் தத்துவங்களை உள்ளடக்கியதே சிவபெருமானின் திருமேனி . அதிலும் ஒரு காலின் விரல்களை தரையில் ஊன்றி ஒரு காலை தூக்கி நிறுத்தி நர்த்தனமாடும் நடராஜன் சிலை உலகின் பூமியின் நடுப்பகுதியில் புவியின் சமநிலையை கட்டிக் காக்கும் மையம் . புவி ஈர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்தும் ஒரு பெரும் பிரபஞ்ச அறிவியல் என்றால் அது மிகையல்ல. இந்த நடராஜர் சிலையின் தத்துவத்தை பெரும் பிரயத்தனம் செய்து ஆய்வு செய்த மேல்நாடுகள் அதிர்ந்து போனதன் விளைவு தான் சிதம்பரம் நடராஜர் ஆலயமும் அங்குள்ள கால் ஊன்றிய புள்ளி பூமியின் மையப் பகுதி என்பது. அதன் பின்னணியில் இருக்கும் பாரதத்தின் ஆன்மீகம் அறிவியல் பிரபஞ்சத்தின் நியதிகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த மக்கள் உணர்ந்து அதன் வழியில் வாழ்ந்த மகத்துவமும் உணர்ந்து தான் உலகமே சனாதனத்தை பாரதத்தை பணிந்து வணங்குகிறது.

வெறும் ஆன்மீகம் பண்பாடு கலாச்சாரம் என்பதை கடந்து ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றே. அது பாரதத்தின் சனாதனத்தின் வாழ்வியலே என்பதை உலகிற்கு ஒற்றை வரியில் சொல்லும் சூசகமாகத்தான் நர்த்தனமாடும் நடராஜர் சிலையை பஞ்சலோக திருமேனியாக ஜி 20 மாநாட்டிற்கென்று சிறப்பாக நிறுவி அதை மாநாட்டில் மண்டப பாயிலின் பாரதத்தின் பாரம்பரிய அடையாளமாக நிலை நிறுத்தி இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஜி20 மாநாடும் அதன் முன்மொழிவுகளும் அந்த அரசியல் மேடையில் வரப்போகும் தீர்வுகளும் எந்த வகையில் தங்களுக்கும் தங்களின் தேசத்திற்கும் நலன் தரும் என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மேடை. அதில் வரவேற்பு வாயிலில் நடுநாயகமாக பாரதத்தின் தர்மத்தின் பரிபூரண உருவமான சிவபெருமானின் நடராஜர் திருமேனியை பிரதிஷ்டை செய்ததன் மூலம் ஒரே பூமி ஒரே குடும்பம் எல்லோருக்கும் எல்லாம் சமம் என்ற வசு தைவ குடும்பம் என்ற தனது சனாதன தத்துவத்தை பாரதம் வெளிப்படையாக உலகிற்கு அறிவித்திருக்கிறது.

இந்த நடராஜர் தத்துவத்தின் ஆன்மீகமும் அறிவியலும் அதை சபைநாயகமாக நிலை நிறுத்தி அதன் மூலம் பாரதம் சொல்லும் சமிக்ஞையும் இனி பாரதம் பெரும் வல்லரசாக மாறினால் நம் நிலை என்னவாகும்? என்ற அச்சத்தில் இருக்கும் நாடுகளுக்கு பெரும் நிம்மதியை கொடுக்கும். பாரதத்தை சீண்டிப் பார்க்கும் நாடுகளுக்கு ஒரு அச்சத்தை விதைக்கும். அதற்கு துணை போகும் நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையை கொடுக்கும். அந்த வகையில் தானும் வாழ்ந்து பிரபஞ்சத்தையும் வாழவைக்கும் பாரதத்தின் தர்மத்தின் வழியில் ஓங்கி உயர்ந்து நிற்கும் அந்த நடராஜர் சிலை சர்வதேச சமூகத்தை முழுமையான நம்பிக்கை நல்லெண்ண அடிப்படையில் பாரதத்தின் பக்கம் நிலையாக நிறுத்தும். அதன் மூலம் உலகில் சாந்தியும் சமாதானமும் பாரதத்தின் தலைமையில் எந்நாளும் நிலை பெறும் .


Share it if you like it