உதயநிதியின் சனாதன விரோத பேச்சு நடவடிக்கை கோரி உச்சநீதிமன்ற நீதிபதிக்கு நாடு முழுவதும் இருந்து கோரிக்கை

உதயநிதியின் சனாதன விரோத பேச்சு நடவடிக்கை கோரி உச்சநீதிமன்ற நீதிபதிக்கு நாடு முழுவதும் இருந்து கோரிக்கை

Share it if you like it

உதயநிதியின் சனாதன விரோத பேச்சின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடு முழுவதிலும் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனுக்கள் கடிதங்களாக போவதாக செய்திகள் வெளியாகிறது. சுமார் 260 க்கும் மேற்பட்ட இந்த கடிதங்களில் இந்த மண்ணின் பாரம்பரிய தர்மமான சனாதனத்தை அவமதிக்கும் வகையிலும் பொய்யான திரிபுகளை பேசியும் எதிர்க்க வேண்டும் அழிக்க வேண்டும் என்று சனாதனிகளை புண்படுத்தும் வகையிலான மத துவேஷப் பேச்சுக்களை பேசிய திமுகவின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சருமான உதயநிதி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நாடு முழுவதிலும் இருக்கும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மூத்த வழக்கறிஞர்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் முக்கிய துறைசார் வல்லுனர்கள் என்று பல தரப்பட்ட மக்களிடம் இருந்தும் ஒருமித்த குரலில் தமிழகத்தில் இந்து இந்திய விரோத கட்சியான திமுகவின் இளைஞர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமாக அமைச்சர் பதவி பிரமாணத்தின் போது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட மதம் அதன் வாழ்வியல் நம்பிக்கைகள் துவேஷிக்கும் வகையிலான பேச்சின் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என்று புகார் மனுக்களை அனுப்பி இருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் இது போன்ற எண்ணற்ற கடிதங்கள் புகார் மனுக்கள் போனதுண்டு. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தேசிய மகளிர் ஆணையம் மனித உரிமைகள் ஆணையம் குடியரசு தலைவர் என்று பலதரப்பட்ட உயர்மட்ட பிரிவுகளுக்கும் புகார் மனுக்களும் கோரிக்கை மனுக்களும் போவதுண்டு. ஆனால் அவை தனிமனித நிவாரணம் வேண்டும் புகார்களாக கோரிக்கை மனுக்களாகவே இருக்கும். பொது விஷயம் சார்ந்த கோரிக்கைகளாக கடிதங்களாக இருக்கும் பட்சத்தில் அவை இந்து இந்திய விரோதிகள் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் அல்லது அவர்களின் மீதான சட்ட நடவடிக்கைகள் ஜனநாயக கருத்து சுதந்திரம் எதிரானது என்ற அடிப்படையிலான கோரிக்கைகளாகவே இருந்திருக்கும்.

எங்கேயும் ஒரு மூலையில் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான ஏதேனும் ஒரு மத துவேஷம் நடந்து அதற்கு எதிராக அபூர்வமாக ஒரு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். அதை ஒட்டி இது ஜனநாயகம் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. மதச்சார்புள்ள நாட்டில் இப்படி ஒரு மதத்திற்கும் அந்த மக்களுக்கு ஆதரவாக சட்டம் செயல்படக்கூடாது என்று முற்றிலும் பெரும்பான்மை மக்களுக்கு விரோதமாகவும் இந்து இந்திய தேசிகளின் ஆதரவு நிலைப்பாட்டிலுமே இப்படிப்பட்ட கோரிக்கை மனுக்கள் இருந்திருக்கும்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் கடந்த காலங்களில் தொடர்ச்சியான சில குற்ற நடவடிக்கைகள் தேசத்தில் நிகழ்ந்தது. அதன் பின்னணியில் சில குறிப்பிட்ட அமைப்புகள் சித்தாந்தங்கள் மீது ஒட்டுமொத்தமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஜனநாயக கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. மதசார்பற்ற எழுத்தாளர்கள் நடுநிலையாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் .பெரும்பான்மை மக்களின் ஆதரவாக ஆட்சியாளர்களும் சட்டமும் மத ஆட்சியை நிறுவ பார்க்கிறது. அந்த வகையில் சிறுபான்மை மக்களின் நலனும் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. இதையெல்லாம் தட்டி கேட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் சமூக ஆர்வலர்கள் போராளிகள் எல்லாம் உயிர் ஆபத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று அப்பட்டமான இந்து இந்திய விரோத ஆதரவு கடிதங்கள் போனதுண்டு.

சமீப காலமாக உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தேசிய விசாரணை முகமையும் ராணுவ உளவுத்துறை மத்திய உளவுத்துறை உள்ளிட்ட பாதுகாப்பு முகமைகள் தேசப் பாதுகாப்பு உளவுப்பணி கண்காணிப்பு என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சாராரை சந்தேகத்துடன் பார்ப்பதாகவும் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதும் விசாரணைகளை மேற்கொள்வதும் ஒரு குறிப்பிட்ட சாராரை தொடர்ந்து அவமதிப்பதாகவும் புண்படுத்துவதாகவும் இருப்பதாகவும் அதன் மூலம் இந்த தேசத்தில் சிறுபான்மையினருக்கு உரிய சட்ட பாதுகாப்பும் சமூக பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்குள்ளாகிறது என்று வெளிப்படையாக குறிப்பிட்டு இந்த நடவடிக்கைகளை எல்லாம் நிறுத்த வேண்டும் . இந்த பாதுகாப்பு முகமைகளின் நிர்வாக முறையை கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பட்டமான தேசவிரோத கோரிக்கையை முன் வைத்த வரலாறு உண்டு.

தென்னிந்திய திரை உலகில் இருந்தும் சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் இயக்குனர்கள் உள்ளிட்ட துறை சார் வல்லுனர்கள் இதுபோன்ற கடிதங்களை எழுதியதோடு தங்களுக்கான விருதுகள் பதக்கங்கள் என்று கடந்த காலங்களில் மத்திய அரசிடம் இருந்து கிடைத்த கௌரவங்களை திருப்பி அளிக்கப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த வகையில் அவர்களுக்கு எதிராக மும்பை தாக்குதல் கார்கில் யுத்தம் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்த சமயத்தில் தேசம் கடந்து வந்த இழப்பை உங்களால் ஜீரணிக்க முடிந்தது . ஆனால் அது தொடர்பான தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளையும் எடுக்கும் போது அது உங்களுக்கு அவமதிப்பதாகவும் புண்படுத்துவதாகவும் இருக்கும் எனில் உங்களின் சார்பும் உங்களின் மன ஓட்டமும் தான் சீர்திருத்தம் மருத்துவத்திற்கு உட்படுத்த வேண்டியது. தவிர தேசிய பாதுகாப்பு முகமைகளின் பணியாற்றும் அதிகாரிகளின் மன ஓட்டம் இல்லை என்று தேசியவாதிகள் பலரும் காட்டமாக பதிலடி கொடுத்தார்கள்.

அந்த வகையில் ராணுவம் பாதுகாப்பு அமைப்புகள் தொடங்கி அப்பாவி மக்கள் வரை கொத்துக் கொலைகள் மூலம் எண்ணற்ற உயிரிழப்புகளை கடந்து வந்த போது நாட்டில் பாதுகாப்பு இல்லை. அரசு இயந்திரம் செயல்படவில்லை ஆட்சியாளர்கள் நிர்வாகத்தில் தோற்றுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தவர்கள். அதே குளறுபடிகளை சரி செய்து நாட்டின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்த போது சிறுபான்மை நலன் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று ஓலமிட்டு ஒப்பாரி வைத்தார்கள்.

இது போன்ற கசப்பான நிகழ்வுகளையும் அப்பட்டமான இந்து இந்திய விரோத துரோஷங்களையும் பார்த்து வந்த பாரதத்தில் முதல் முறையாக வெளிப்படையாக இந்த தேசத்தில் பொது மேடையில் இந்த மண்ணின் பாரம்பரிய தர்மம் அதன் வாழ்வியல் வரலாறு அவமதிக்கப்படுகிறது. இதை செய்வது ஒரு மாநில அரசின் கட்சி சார்ந்த ஆட்சியாளர்கள். இவர்களின் இந்த தேச விரோதத்தை இந்து விரோதத்தை மத துவேஷத்தை தடுத்து நிறுத்துங்கள். அவர்களின் மீது உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கைகளை எடுங்கள் என்று வெளிப்படையாக தங்களின் சுய அடையாளத்தோடு கோரிக்கை வைக்கும் அளவில் தேசிய சார்பு உடைய குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது தேசம் ஆரோக்கிய பாதையில் பயணிப்பதற்கான அறிகுறி.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நிவாரணத்தை ஒருமித்த குரலில் வெளிப்படையாக ஜனநாயகத்தின் வழியில் கேட்டுப் பெறுவதற்கு உகந்த ஆரோக்கியமான சூழல் தேசத்தில் நிலவுவது உறுதியாகிறது. இந்த ஆரோக்கியமான சூழலை உறுதிப்படுத்தும் வகையில் தேசத்தை நிர்வகிக்கும் ஆட்சியாளர்களும் அவர்களின் அரசு எந்திரமும் நேர்மையான வழியில் செயல்படுவதை வெளிப்படுத்துகிறது. அந்த வழியில் இந்த தேசியவாதிகளின் மனக்குமுறலையும் கோரிக்கையையும் புகார் மனுக்களாக பெற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மத துவேஷம் பேசி அதன் மூலம் மக்களின் மனதில் கசப்புணர்வையும் வெறுப்புணர்வையும் வளர்க்க தனது அரசியல் முகத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்யும் உதயநிதி போன்ற மக்கள் பிரதிநிதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கட்டும். பிரிவினைவாத பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கவும் அந்நியர்களின் கைக்கூலிகளாக இந்த தேசத்தில் வலம் வரும் இந்து இந்திய விரோதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கை பாடமாகவும் இருக்கட்டும்.


Share it if you like it