மதமாற்றம் மட்டுமல்ல, மணலும் கடத்துவோம்: பிஷப் உட்பட 6 பாதிரியார்கள் கைது!

மதமாற்றம் மட்டுமல்ல, மணலும் கடத்துவோம்: பிஷப் உட்பட 6 பாதிரியார்கள் கைது!

Share it if you like it

பாதிரியார்கள் மத மாற்றம் செய்வது மட்டுமல்ல, மணல் கடத்துவது உட்பட அனைத்து பித்தலாட்ட வேலைகளையும் செய்வார்கள் என்பதை நிரூபித்திருக்கிறது திருநெல்வேலி சம்பவம்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க கிறிஸ்தவ சபைக்குச் சொந்தமான 300 ஏக்கர் நிலம் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி பகுதியிலுள்ள பொட்டல் என்கிற கிராமத்தில் இருக்கிறது. இங்கு, எம்.சாண்ட் மணல் தயாரிக்கும் ஆலை நடத்துவதற்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் என்பவருக்கு 2019-ல் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு எம்.சாண்ட் தயாரித்தார்களோ இல்லையோ, அருகிலிருக்கும் ஓடைகளிலிருந்து திருட்டுத்தனமாக ஆற்று மணலை அள்ளி கடத்தி விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்திருக்கிறார்கள்.

இத்தகவல் எப்படியோ வருவாய்த்துறையினருக்குத் தெரிந்து விட்டது. உடனே, சேரன்மகாதேவி சப் கலெக்டர் பிரதிக் தயாள், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். அப்போது, அப்பகுதியிலிருந்து ஆற்று மணல் கடத்தப்பட்டது உறுதியானது. இதையடுத்து, கான்ட்ராக்டரான பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், 9.50 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட சமீர் என்பவர் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், மேற்படி மணல் கடத்தல் விவகாரத்தில் உயர் அதிகாரிகள் உட்பட முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்குச் சென்றது. அவர்கள், கேரள பிஷப் சாமுவேல் மார் இரோனஸ் மற்றும் 5 பாதிரியார்களை அழைத்து விசாரணை செய்தனர். அப்போது, மணல் கடத்தல் நடந்தது உண்மை என்பது தெரியவந்ததால், 6 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்தனர். இவர்களில் பிஷப் சாமுவேல் மார் இரணியஸ், ஜோஸ் சமகலா ஆகியோர் கொரோனா பாதிப்பு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மற்ற பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ், ஜிஜோ ஜேம்ஸ், ஜோஸ் கலவியால் ஆகிய 4 பேரும் நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதிரியார்கள் மணல் கடத்திய இந்த விவகாரம்தான் தற்போது தமிழகம் மற்றும் கேரளாவில் பரபரப்பாக பேசப்படும் சம்பவமாகும்.


Share it if you like it