சத்தியம் டிவி நெறியாளரை   வெளுத்தெடுத்த – வேலூர் இப்ராஹிம்!

சத்தியம் டிவி நெறியாளரை வெளுத்தெடுத்த – வேலூர் இப்ராஹிம்!

Share it if you like it

பா.ஜ.க. சிறுபான்மை தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், சத்தியம் டிவி நெறியாளர் முக்தாரை வெளுத்து வாங்கியிருக்கும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

வேலூர் இப்ராஹிம் பேசியதாவது ;

கிறிஸ்தவ மிஷநரிகளை கையில் வைத்துக் கொண்டு, தி.மு.க. கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு, முக்தார் என்கிற கேடு கெட்ட நபரை வைத்துக் கொண்டு, பா.ஜ.க. பெண்களை இழிவுப்படுத்த கூடிய வேலையை செய்து வருகின்றனர். பா.ஜ.க. சிறுபான்மை மாநில தலைவி டெய்ஸி தங்கைய்யாவை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்வதுதான் ஊடகத்துறையின் நெறியா? ஒரு ஊடகவியலாளர் இப்படிதான் பேசுவதா? இதனை, யாராவது கட்டுப்படுத்த வேண்டாமா? பா.ஜ.க.வினர் இதுகுறித்து ஏதாவது பேசினால் ஊடகத்தை அவமதித்து விட்டார்கள் பேசுகின்றனர்.

சத்தியம் என்கிற கேடுகெட்ட டி.வி. பா.ஜ.க. பெண்களை இழிவுப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, எந்த ஊடகம் கண்டித்துள்ளது. எந்த நெறியாளர் கண்டித்துள்ளார். ஒரு நெறியாளருக்கான பண்பு இல்லை. ஒரு கேடு கெட்ட நெறியாளரை சத்தியம் டி.வி. வைத்து கொண்டுள்ளது. தி.மு.க.வின் ஊடகங்களாக இருக்கிறிர்களா? நடுநிலையான ஊடகங்களாக இருக்கிறீர்களா? என்று காட்டமாக பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it