இதுதேவையா சங்கரு… பா.ஜ.க தலைவர் நோஸ்கட்!

இதுதேவையா சங்கரு… பா.ஜ.க தலைவர் நோஸ்கட்!

Share it if you like it

பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சரவணன் குறித்து அவதூறு செய்தி பரப்பிய போலி புலனாய்வு புலி சவுக்கு சங்கருக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பொய், புரட்டு மற்றும் நேரில் சென்று பார்த்தது போல பல கப்சா கதைகளை அள்ளி விட கூடியவராக இருப்பவர் சவுக்கு சங்கர். இவர், பிரபல யூடியூப் சேனல்களில் தனது வாய்க்கு வந்ததை பேசி அதன் மூலம் ஆதாயம் தேடும் நபர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. அந்தவகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், பாரதப் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் உட்பட பல வல்லரசு நாடுகளின் தலைவர்களுக்கு சமூகவலைத்தளங்கள் வாயிலாக இன்று வரை எச்சரிக்கை விடுக்கும் நபராக இருந்து வருகிறார்.

இதுதவிர, தனக்கு பிடிக்காதவர்கள் பற்றி பொய் செய்தி பரப்பி அதன் மூலம் விளம்பரம் தேடுவதையே தனது கொள்கையாக கொண்டவர். இந்த நிலையில் தான், பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் மதுரை மாவட்ட செயலாளருமான டாக்டர். சரவணன் பா.ஜ.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர போகிறார் என்று வழக்கமான கப்சா கதையை அளந்து விட்டு இருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில் தான், புலனாய்வு புளி சவுக்கு சங்கருக்கு தரமான பதிலடியை டாக்டர். சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதன் லிங்க் இதோ.


Share it if you like it