தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சீமான் மிக கடுமையாக சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பதாக பாரதப் பிரதமர் மோடி கூறியிருந்தார். இதனிடையே, இந்தியா டுடே ஊடகத்திற்கு நேற்றைய தினம் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காணொளி வாயிலாக பேட்டி அளித்திருந்தார். அப்போது, ஆங்கில ஊடக நெறியாளர் மக்களுக்கு இலவச திட்டங்கள் வழங்குவது தொடர்பான கேள்வி ஒன்றினை அமைச்சரிடம் முன்வைத்து இருக்கிறார். இதற்கு, தியாகராஜன் இலவசங்களுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. அமைச்சர் தெரிவித்த கருத்து குறித்து, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பத்திரிகையாளர்கள் கேட்டு இருக்கின்றனர். இதற்கு, சீமான் கூறியதாவது;
இலவசங்களால் நாடு வளர்கிறது என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா? இலவசங்களால் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுக்கிறீர்கள். ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் கடன் போய்விட்டது. ஏன் இன்னும் வெற்று அறிவிப்புகளை செய்கிறீர்கள். இலவசம் வழங்குவதும் லஞ்சம்தான். இலவசத்தால் நாடு ஒரு புள்ளிகூட வளராது. பொருளாதாரம் கற்ற ஒருவர் இப்படி பேசக் கூடாது என சீமான் தாளித்து எடுத்து இருக்கிறார்.