பேனா சின்னத்தை உடைப்பேன் என்று கூறிய சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் ரூ. 80 கோடி செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக ’பேனா நினைவு சின்னத்தை அமைப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் சென்னை திருவல்லிகேணியில் நேற்றைய தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் என ஏராளமாவனர்கள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றும் போது, பள்ளிகளை சீரமைக்க நிதியில்லை. பேனா சின்னத்தை அமைக்க மட்டும் எப்படி? நிதி வந்தது. மக்களின் வரிப்பணத்தில் பேனா சின்னம் அமைக்க கூடாது. உங்களது சொந்த பணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மீறி அமைத்தால் நான் ஆட்சிக்கு வந்த உடன் அதனை உடைப்பேன் என ஆவேசமாக கூறியிருந்தார். சீமானின் இந்த கருத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, சீமானை கழக கண்மணிகள், முன்னோடிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, சீமான் ஆவேசமாக பேசியதை குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு, அமைச்சர் சேகர் பாபு அவருக்கு மட்டும்தான் கை இருக்கிறதா? எங்கள் கை பூ பறிக்கவா உள்ளது என தனது அமைச்சர் பொறுப்பையும் மறந்து விட்டு பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.