ஐ.எஸ்.ஐ.எஸ்.பொறுப்பேற்பு: சீமானை தேடும் நெட்டிசன்கள்

ஐ.எஸ்.ஐ.எஸ்.பொறுப்பேற்பு: சீமானை தேடும் நெட்டிசன்கள்

Share it if you like it

கோவை குண்டு வெடிப்பில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில், ஜமேஷா முபின் என்பவன் உடல் கருகி பலியானான். முதலில் இது ஒரு சிலிண்டர் வெடிப்பு என்று கருதப்பட்ட நிலையில், காருக்குள் சிதறிக் கிடந்த ஆணிகள் மற்றும் பால்ரஸ், கோழி குண்டுகள் இது ஒரு சதிச்செயலாக இருக்கும் என்பது தெரிய வந்தது. இதன்பிறகு, கிடைத்த சி.சி.டி.வி. காட்சிகள், ஜமேஷா முபின் வீட்டில் கிடைத்த வெடிபொருட்கள் ஆகியவை இது ஒரு திட்டமிட்ட சதி என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். இதனை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பல திடுக்கிடும் தகவல்களை கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஒரு குறிப்பட்ட சமூகத்தின் மீது பழி சுமத்த பா.ஜ.க. முயல்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி வந்தார். இப்படிப்பட்ட சூழலில் தான், கோவை குண்டு வெடிப்பில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பு ஏற்றுள்ளது. இதனை தொடர்ந்து, சீமானை நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.


Share it if you like it