திருமகன் ஈ.வெ.ரா. முதலில் சேர விரும்பிய கட்சி நாம் தமிழர் கட்சிதான் என சீமான் கூறிய காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன். இவரது, மகன் திருமகன் ஈ.வெ.ரா – 46. இவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணம் அடைந்தார். அந்தவகையில், தற்போது அத்தொகுதி காலியாக உள்ளது. இதனை தொடர்ந்து, ஈரோடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். அதேபோல, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா களம் காண்கிறார். பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்னவென்பது குறித்த முழு விவரம் இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
இப்படிப்பட்ட சூழலில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதுதான் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அக்காணொளியில், அவர் பேசியதாவது ;
தம்பி திருமகன் ஈ.வெ.ரா.வை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு தெரியாது நான் இந்த செய்தியை நான் உங்களுக்கு சொல்கிறேன். முதலில் நமது கட்சியில் சேருவதற்கு தான் வந்தார். அது பலருக்கு பேருக்கு தெரியாது. அதன் பிறகு அவரது அப்பா என்ன? சொன்னார் என்று தெரியவில்லை. என்னிடம் கேட்டான் நான் என்ன செய்வது என்று. நீ, அங்கேயே இருந்து விடு என்று நான் கூறிவிட்டேன். அவன் இறந்ததில் எனக்கு மிகுந்த மன துயரம் என குறிப்பிட்டுள்ளார்.