ஹிந்துக்களின் உணர்வுகளையும், வழிபாட்டு முறைகளையும், தொடர்ந்து புண்படுத்தும் கட்சிகள் அதிகம் உள்ள மாநிலம் எதுவென்றால் அனைவரும் சுட்டி காட்டும் மாநிலமாக இன்று வரை தமிழகம் இருந்து வருகிறது என்பது மிகவும் வேதனைக்குறிய விடயம் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.
திமுக, விசிக, திக, கம்யூனிஸ்ட், கிறிஸ்தவ மிஷநரிகள், ஓட்டு அரசியல்வாதிகள், காசு ஊடகங்கள், பொய்யை நிரப்பி எழுதும் பத்திரிக்கைகள், அனைவரும் குறி வைக்கும் மதம் என்றால் அது ஹிந்து மதம் என்பதாக மட்டுமே இருக்க முடியும்.
கோடானு கோடி ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்திய கருப்பர் கூட்டத்தை இன்று வரை. தி.மு.க தலைவரோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ கண்டிக்காமல் மெளனம் காப்பதன் மூலம் அவர்களின் உண்மையான சுயரூபத்தை மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள முடியும் என்பது நிதர்சனம்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அமெரிக்க நாராயணன் அவர்கள் என் மதத்தையும் சேர்த்து, என் கடவுளையும் சேர்த்து, இழிவுப்படுத்தாக நபர்களுக்கே நமது ஓட்டு இருக்க வேண்டும் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம். தி.மு.க மற்றும் காங்கிரஸ், கூட்டணிக்கு ஓட்டு போட கூடாது. பா.ஜ.க கூட்டணிக்கே அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்று., நாராயணன் மறைமுகமாக மக்களிடம் கேட்டு கொண்டதற்கு நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
#எம் (எந்த) மதத்தை/ கடவுளை இழிவுபடுத்தும்
எவருக்கும்#நம்ஓட்டுகிடையாது என்பதை தமிழகத்திலும் இந்தியாவிலும் உள்ள
அனைத்து மதத்தினரும், கடவுள் நம்பிக்கை உடையவர்களும் உரக்கச் சொல்வோம்.
மத நல்லிணக்கம் காப்போம்.
சாதிய மதவாதிகளை
தேர்தல் அரங்கில்
அடையாளம் கண்டு
ஜனநாயக முறையில் அழிப்போம்— Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன் (@americai) March 20, 2021
எந்த ஒரு இந்துவும் அடுத்த மதத்தை கனவிலும் இழிவு படுத்த மாட்டான். தி க, திமுகவை சேர்ந்தவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தான் நம் மதத்தை இழிவாக பேசுகிறார்கள். நீங்கள் கூறுவது போல் இந்த தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்.
— Chinni ஜெய் ஹிந்த் 🇮🇳 (@Karthik34969673) March 20, 2021