கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராக பார்க்கப்படுபவர் மூத்த பத்திரிகையாளர் மணி. இவர், தி.மு.க. அரசை மிக கடுமையாக சாடிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகம் நன்கு அறிந்த பத்திரிகையாளர்களில் மணியும் ஒருவர். இவர், கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராக பார்க்கப்படுவர். இவர், மத்திய அரசு மற்றும் பாரதப் பிரதமர் மோடிக்கு எதிராக மட்டுமே கருத்துக்களை முன்வைக்க கூடியவர். அதேவேளையில், கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குற்ற சம்பவங்கள் நடந்தால் வழக்கம் போல கப்சிப். ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஏதேனும் சிறு தவறு நடந்தால், உடனே குரல் கொடுக்க ஓடி வருவார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி, பிரபல இணையதள ஊடகமான விகடன் மூத்த பத்திரிகையாளர் மணியிடம் நேர்காணல் நடத்தி இருக்கிறது. அப்போது, அவர் கூறியதாவது. தி.மு.க. ஆட்சியில் லாட்டரி சீட்டின் விற்பனை அதிகரித்து இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, சீட்டாட்ட கிளப்பை அடக்கி வைத்து இருந்தார். ஆனால், இன்று நிலை முற்றிலும் மாறிவிட்டது. இது எல்லாம், இந்த ஒரு வருட காலத்தில், நடந்துள்ளது என விடியல் அரசு மீது கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்து இருக்கிறார். மேலும் விவரங்களுக்கு அதன் லிங்க் இதோ.