செந்தில் பாலாஜி ஃபார்முலாவால் கம்பி எண்ணும் கேரள பாதிரியார்கள்!?

செந்தில் பாலாஜி ஃபார்முலாவால் கம்பி எண்ணும் கேரள பாதிரியார்கள்!?

Share it if you like it

தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் சமயத்தில் சொன்ன 11.05 மணி பார்முலாவை கடைப்பிடித்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் கேரளாவைச் சேர்ந்த 6 பாதிரியார்கள்.

தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 11.00 மணிக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டதும், 11-05 மணிக்கு மாட்டு வண்டியை ஆற்றில் இறக்கி மணல் அள்ளலாம். எந்த அதிகாரியாவது தடுத்தால் நீங்கள் எனக்கு போன் செய்யுங்கள், அவர் அங்கு இருக்க மாட்டார் என்று தேர்தல் பிரசாரத்தின்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மக்கள் முன்னிலையில் பேசியிருந்தார் செந்தில் பாலாஜி.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பஜ்ஜி கடை, பிரியாணிக் கடை, தேங்காய்க் கடை என கழக கண்மணிகள் ஆடிய ஆட்டங்களை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. தற்பொழுது தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருவதால் காலில் சலங்கை கட்டி விட்டது போலகி விட்டது. சட்டம், ஒழுங்கு நாளுக்கு நாள் சந்தி சிரித்து வருவது ஒருபுறம் என்றால், கனிம வளங்கள் கொள்ளை போகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதை மெய்ப்பிக்கும் வகையில், கிறிஸ்தவ பாதிரியார்கள் 6 பேர் தமிழகத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, கேரள மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க கிறிஸ்தவ சபையை சேர்ந்த இவர்கள், தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் பொட்டல் என்கிற கிராமத்தில் எம்.சாண்ட் தயாரிக்கும் ஆலை நடத்துவதாகக் கூறி, திருட்டுத்தனமாக ஆற்று மணலை அள்ளி கடத்தி விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்திருக்கிறார்கள். விஷயம் தெரிந்து 6 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

இதைத்தான் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். அதாவது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 11.05 மணிக்கு நீங்கள் ஆற்றில் இறங்கி மணல் அள்ளலாம் என்று செந்தில் பாலாஜி சொன்ன ஃபார்முலாவை கேரள பாதிரியார்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கிண்டல் செய்கிறார்கள் நெட்டிசன்கள்.


Share it if you like it