பணமோசடி வழக்கு உச்சநீதிமன்றம் குட்டு!

பணமோசடி வழக்கு உச்சநீதிமன்றம் குட்டு!

Share it if you like it

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் செந்தில் பாலாஜி. இவரது, வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்து இருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சிலரிடம் பணம் பெற்று இருக்கிறார். ஆனால், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நம்பிக்கை மோசடி செய்துள்ளார். இதனால், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து, அந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து, ஆளும் கட்சியில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்கள் காரணமாக, செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை இழந்தார். இதையடுத்து, அவர் தி.மு.க.வில் ஐக்கியமாகும் நிலை ஏற்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2021 – ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், தி.மு.க.வின் சார்பில் கரூரில் செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. தனது, அமைச்சர் பதவிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து உண்டு. என்பதை அறிந்த செந்தில் பாலாஜி தம், மீது புகார் அளித்தவர்களின் பணத்தை திருப்பி கொடுக்க முடிவு செய்தார். இதையடுத்து, பணம் கிடைத்தவர்கள் தங்களது வழக்கை வாபஸ் பெற்றனர். அதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.

இப்படிப்பட்ட சூழலில் தான், டெல்லி உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் அந்த உத்தரவை ரத்து செய்து இருக்கிறது. இதனால், அமைச்சரின் வழக்கை மீண்டும் விசாரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம், தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it