செந்தில்பாலாஜிக்கு ஆபரேஷனே நடக்கவில்லை: பிரேமலதா அதிரடி!

செந்தில்பாலாஜிக்கு ஆபரேஷனே நடக்கவில்லை: பிரேமலதா அதிரடி!

Share it if you like it

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆபரேஷனே நடக்கவில்லை என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஆனால், நெஞ்சுவலி காரணமாக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்தததில், அவருக்கு இதயத்தில் 4 இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனைக்கே நேரில் வந்து விசாரணை நடத்திய நீதிபதி, செந்தில்பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன் பிறகு அறுவைச் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 21-ம் தேதி அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவக்குழு கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில்தான், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அறுவைச் சிகிச்சையே நடைபெறவில்லை என்று தே.மு.தி.க. பொருளாளார் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, “தமிழகத்தில் ஊழல், லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில்பாலாஜி, அமைச்சர் நேருவுக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பது, அரசு மருத்துவமனையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அப்படியென்றால், அரசு மருத்துவமனை தரமில்லை என்று இந்த அரசே ஒப்புக் கொள்கிறதா? அமைச்சர் என்றால் ஒரு நிலைப்பாடு, பொதுமக்கள் என்றால் ஒரு நிலைப்பாடா? செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடக்கவே இல்லை என்று பலரும் கூறுகின்றனர். ஆகவே, இதனை அமலாக்கத்துறை விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it