செப்டம்பர் 29 – ஸர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஆபரேஷன் – பாரத ராணுவத்தின் புதிய அத்தியாயத்தின் வெற்றி தொடக்கம்

செப்டம்பர் 29 – ஸர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஆபரேஷன் – பாரத ராணுவத்தின் புதிய அத்தியாயத்தின் வெற்றி தொடக்கம்

Share it if you like it

கடந்த 2016 ஆம் ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 29 ஆம் நாளில் பாரத ராணுவத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு குழு பாரதத்தின் எல்லையை கடந்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் நிறைந்திருந்த பயங்கரவாத முகாம்களை ஒரே இரவில் குண்டு வீசி தாக்கி அழித்தது. பாரதத்தின் எல்லைப் புறம் முழுவதிலும் கட்டமைக்கப்பட்டிருந்த பயங்கரவாத முகாம்கள் அதிலிருந்து பயங்கரவாதிகள் ஆயுதங்கள் தளவாடங்கள் ஆவணங்கள் என்று அனைத்தும் ஒரே இரவில் தீக்கிரையாக்கப்பட்டது. அதுவரையில் எல்லை தாண்டிய பயங்கரவாததம் இழப்பு களை சந்தித்து அதன் காரணமாக தற்காப்பு யுத்தத்தையும் மட்டுமே நடத்தி வந்தது பாரதம். முதன்முதலாக தனது தேசத்தின் இறையாண்மை ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு பதிலடி தரும் விதமாக பகைநாட்டின் உள்புகுந்து ஸர்ஜிக்கல் ஸ்ட்ரைக் திட்டமிட்ட துல்லியமான தாக்குதல் நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உரி தாக்குதல் நடந்து முடிந்த சில தினங்களில் மத்திய அரசு தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தியது. அதில். இந்திய ராணுவம் தரப்பில் சேதமின்றி எதிரிகளை ஊடுருவி ஊடறுக்கும் துல்லியமான தாக்குதல் திட்டம் நடத்த பாரதம் தயாரானது. பாதுகாப்புத் துறை அமைச்சர் இராணுவ தளபதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் தலைமையில் ஒரு பெரும் ரகசிய திட்டம் தயாரானது. கடந்த காலங்களில் எல்லாம் மிகப்பெரும் தாக்குதல் நடக்கும் நேரங்களில் ராணுவம் பதிலடித்ர தயாராகும் போதெல்லாம் கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் ராணுவத்தின் தளபதிகளையும் ராணுவ முடிவுகளையும் தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்காக கட்டி வைத்தார்கள். அந்த வலியும் வன்மமும் பெரும் ரணமாக ராணுவத்தின் மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை விரவி இருந்தது. இதை உணர்ந்து கொண்ட மத்திய அரசு தேசத்தை பாதுகாக்கும் அவர்களின் மன வலியும் உணர்வுகளும் மதிக்க பட்டால் ஒழிய இங்கு அவர்களுக்கு உரிய கௌரவத்தை நாம் பெற்றுத்தர முடியாது . அதன் மூலம் அவர்களின் நம்பிக்கை நல்லெண்ணத்தையும் தேசமும் மக்களும் சம்பாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ராணுவத்திற்கு உரிய சுதந்திரம் அவர்களின் கருத்துக்களுக்கு உரிய முக்கியத்துவமும் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தெளிவான தேர்ந்த திட்டமிடலோடு ஒரு துல்லியமான தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளுக்கு முடிவு கட்ட தயாரானது. எந்த எல்லைப்புற பயங்கரவாத முகாம்களை மையமாக வைத்து காஷ்மீரில் ராணுவம் பொதுமக்கள் மீது பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறதோ? அந்த பயங்கரவாத முகாம்களை அதில் இருக்கும் தீவிரவாதிகள் ஆயுதங்கள் தளவாடங்கள் அனைத்தையும் மொத்தமாக அழித்தொழிக்க வேண்டும் . அதே நேரத்தில் இதை வெளிப்படையான போராகவும் நடத்தக்கூடாது. திட்டமிட்ட துல்லிய தாக்குதலாக நடத்திக் காட்ட வேண்டும். அதைவிட முக்கியம் நமது தரப்பில் இருந்து ராணுவத்தில் உயிர் சேதமோ பொருள் சேதமோ இருக்க கூடாது என்ற நிலையிலும் தெளிவாக திட்டமிட்டார்கள்.

கார்கில் போரின் போது இந்திய ராணுவத்திற்கு பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் காஷ்மீரில் மலைமுகடுகளில் ராணுவத்தின் முன்னேற்றத்திற்கும் எதிர் தரப்பை கண்காணித்து வழிநடத்தவும் இந்திய ராணுவத்திற்கு இந்திய விமானப்படை முழுமையாக துணை நின்றது. அதே அடிப்படையில் மீண்டும் விமானப்படையை முழுமையாக துணைக்கு பயன்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் இதற்கென்று சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு நுண்ணறிவு பிரிவுகள் அதிநவீன ஆயுதங்கள் தொழில்நுட்பங்கள் தளவாடங்களை இலகுவாக கையாளக்கூடிய திறமையான வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட சிறப்பு குழு கட்டமைக்கப்பட்டது. இந்திய விமானப்படை தளத்தில் இருந்தே எந்த உரி பகுதியில் குறி வைத்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டதோ? அதற்கு அருகில் இருக்கும் இந்திய விமானப்படை தளத்தில் இருந்து இதற்குரிய முழு கண்காணிப்பு ஒருங்கிணைப்பும் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. உரித்தாக்குதல் நடந்து அதன் அடி மாறாத நிலையில் அடுத்த சில வாரங்களிலேயே இதற்கான முழு திட்டமிடலில் இராணுவம் இறங்கியது. முழுமையான வழிகாட்டுதல் ஒருங்கிணைப்பு நேரடியான கண்காணிப்பில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கட்டமைப்பில் மத்திய அரசு கண்காணிப்பின் கீழ் நேரடியாக நடந்த துல்லிய இராணுவ தாக்குதல் இது.

அதன்படி இரண்டு விதமான திட்டமிடல்களுடன் இந்திய ராணுவம் விமானப்படையும் துணையோடும் வழிகாட்டுதலோடும் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பகுதிகளில் நள்ளிரவில் தரையிறங்கியது. விமானத்திலிருந்து வீரர்கள் மட்டும் தரையிறங்கும் துல்லியமான தாக்குதல் நடவடிக்கையின் அடிப்படையில் அதின் நவீன தொழில்நுட்பங்கள் எதிரி நாட்டு ராடாரிடம் சிக்காத வகையில் மிக தாழ்வாக பறக்கும் தெளிவான திட்டமிடல் என்று இந்திய ராணுவம் முன்னேறி சென்றது. ஏற்கனவே தீட்டப்பட்ட திட்டங்களின் படி பல குழுக்களாக பிரிந்து சென்று குறி வைக்கப்பட்ட அத்தனை பயங்கரவாத முகாம்களும் நவீன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கி அழிக்கப்பட்டது. குறித்து வைத்தது போல அத்தனை ராணுவ வீரர்களும் பத்திரமாக குழுக்களாக திரும்பி வந்து இந்திய விமானப்படை துணையோடு மீண்டும் பாரதத்திற்குள் பத்திரமாக தரையிறங்கினார்கள்.

இதில் இந்திய ராணுவ தரப்பில் எந்த விதமான உயிர் சேதமும் இல்லை என்பதும் குறிவைத்து தாக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களில் ஒருவர் கூட உயிர் தப்பவில்லை. அங்கிருந்த ஆயுதங்கள் தளவாடங்கள் அத்தனையும் தீக்கிரையாக்கப்பட்டதும் பாகிஸ்தானை பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது . இவ்வளவு பெரிய துல்லிய தாக்குதலை நள்ளிரவில் அதுவும் எல்லைக்குள் ஊடுருவி வந்து அதிரடியாக பாரதத்தின் ராணுவம் நிகழ்த்தும் என்பதை கனவில் கூட அதுவரையில் பாகிஸ்தான் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் என்ன நடக்கிறது எப்படி நடந்தது என்று யோசிக்கும் முன் அத்தனையும் நடந்து முடிந்திருந்தது. உலக நாடுகள் பலவற்றிலும் தங்கள் தேசத்தின் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்தி விட்டது என்று பாகிஸ்தான் வெளிப்படையாக புகார் கொடுக்க முடியாத நிலையில் திருடனை தேள் கொட்டிய கதையாக பரிதவித்தது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளும் காஷ்மீரின் ஒட்டிய பாகிஸ்தானின் எல்லைப் பகுதியிலும் சர்வதேச விதிகளின் அடிப்படையில் கட்டுமானங்கள் இருப்பதற்கு என்று தெளிவான விதிகள் யுத்த நியதிகள் உண்டு. அதன் அடிப்படையில் அங்கு பாகிஸ்தான் தரப்பில் ராணுவ கட்டுமானங்களும் தளவாட நிலைகளும் இருக்க முடியாது. அதனால் தாக்கி அழிக்கப்பட்டது பாகிஸ்தான் ராணுவத்தின் ராணுவ நிலைகள் என்றும் குற்றம் சாட்ட முடியாத நிலையில் பாகிஸ்தான் பதறியது. எங்களது எல்லைப் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை எல்லாம் பாரதம் தாக்கி அழித்து விட்டது என்று வெளிப்படையாக பாகிஸ்தான் குற்றம் சாட்டு வைக்கும் பட்சத்தில் பாரதம் தொடங்கி உலக நாடுகள் அத்தனையும் அப்படியானால் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் பயங்கரவாத முகாம்களும் பயிற்சி முகாம்களும் இருப்பது உண்மைதானா ? அவை அத்தனையும் பாகிஸ்தான் மீது பாரதம் இதுவரையில் வைத்த குற்றச்சாட்டுகளும் உண்மைதானா ?என்ற கேள்வி எழும். தீவிரவாத தடுப்பு சட்டத்தின் படி உலக நாடுகளும் சர்வதேச நாடுகளும் பாகிஸ்தானின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதன் நிலை மோசமாகும் என்ற இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் மௌனமானது.

ராணுவ வீரர்கள் உயிரிழந்த நாள் முதலாய் கருப்பு சட்டை அணிந்து கிட்டத்தட்ட 13 நாட்கள் ஒரு பெரும் தவத்தோடு கடந்து வந்த பாரதத்தின் பிரதமர் 13-ஆம் நாள் யுத்தம் என்னும் மகாபாரதத்தின் பெரும் இழப்பை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்னும் பெயரில் அதே 13 ஆம் நாளில் பாரதத்தின் ராணுவம் எதிரி நாட்டின் எல்லையில் நுழைந்து வெற்றிகரமாக நடத்திக் காட்டியது பிறகு அவரது விரதத்திலும் 13 நாள் துயரத்திலும் இருந்து வெளிவந்தார். அந்தப் 13 நாட்களிலும் இரவு பகல் பாராது இந்திய ராணுவம் உளவுத்துறை ராணுவத்தின் நுண்ணறிவு பிரிவு உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு துறை அமைச்சகம் தேசிய பாதுகாப்பு ஆலோசனை அலுவலகம் அத்தனையும் அர்ப்பணிப்போடு பணியாற்றியதும் திறமையான அதிகாரிகள் துணிச்சலான வீரர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்தியதும் தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் வெற்றிக்கு துணை நின்றது. இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் நிகழ்வில் உயிரிழந்த பல ராணுவ வீரர்களின் மனைவிகள் தங்களின் கணவரின் மீது கொண்ட காதலை மெய்ப்பிக்கும் விதமாக அவர்கள் விட்டுச் சென்ற பணியை தாங்களும் தொடர விரும்புவதாக தாமாக முன்வந்து இந்திய ராணுவத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அதில் பலரும் குறுகிய கால பயிற்சியை முடித்துவிட்டு ராணுவ அதிகாரிகளாக தற்போது இந்திய ராணுவத்தில் பாரதத்தின் மஹா சக்தி அம்சமாக வலம் வருகிறார்கள்.


Share it if you like it