இந்திய சந்தையில் மீண்டும் அன்னிய முதலீடு!

இந்திய சந்தையில் மீண்டும் அன்னிய முதலீடு!

Share it if you like it

இந்த சந்தையில் மீண்டும் அன்னிய முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 7,700 கோடி அன்னிய முதலீடுகள் இந்திய பங்குச்சந்தைக்கு வந்திருக்கிறது.

கொரோனா தொற்று பாதிப்பால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், பொருளாதாரமும் சிறிது முன்னேற்றம் கண்டது. எனினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின பொருளாதாரம் கடந்த 10 மாதங்களாகவே வீழ்ச்சி அடைந்து வருகிறது. தற்போது, ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக இது மேலும் ஸ்தம்பித்திருக்கிறது. ஆகவே, தங்கள் நாட்டு மக்கள் மற்ற உலக நாடுகளில் முதலீடு செய்வதை தவிர்க்க, தனது வட்டி விகிதத்தை உயர்த்தி தங்கள் வீழ்ச்சியை தற்காலிகமாக காத்துக் கொண்டது அமெரிக்கா.

இதனால், உலக நாடுகளின் சந்தையில் இருந்து அமெரிக்க முதலீட்டாளர்கள் வெளியேறத் தொடங்கினர். கடந்த 7 மாதங்களில் மட்டும் இந்திய சந்தையில் இருந்து சுமார் 1.65 லட்சம் கோடி அன்னிய முதலீடுகளை விற்று விட்டனர். இதனால், நமது சந்தையில் பெரும் சரிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், மத்திய அரசின் துரித நடவடிக்கையாலும், அன்னிய முதலீடுகளுக்கு ஈடான முதலீட்டை உள்நாட்டு முதலீட்டாளர்கள் நமது சந்தையில் அதிகரித்ததாலும் பங்கு வர்த்தகமானது ஸ்திரமான நிலையில் இருந்து வருகிறது. தற்போது அன்னிய முதலீடுகள் வரத் தொடங்கி இருப்பதால், வரும் காலங்களில் நமது சந்தையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.


Share it if you like it