ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு அங்குள்ள பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் ஏழை, எளியவர்களின் வாழ்வாதாரம் மிகப் பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. அங்கு நிலைமை மிகவும் மோசமாகி கொண்டே செல்வதாக இந்தியா உட்பட பல உலகநாடுகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பின்பு ஆப்கனில் உள்ள ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, ஷியா முஸ்லிம்களை குறி வைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது.
ஆப்கனில் குண்டுஸ் பகுதியில் கடந்த 8ம் தேதி மசூதி ஒன்றில் தொழுகையின் போது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். அதேபோல் கடந்த 15ம் தேதி கந்தஹார் பகுதியில் ஷியா மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 60-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த இரு குண்டுவெடிப்புகளுக்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‛உலகின் எந்தப் பகுதியில் ஷியா முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்கள் எங்கள் குறியில் இருந்து தப்ப முடியாது. எங்களால் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவர். குறிப்பாக, ஆப்கனில் உள்ள ஷியா முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என அந்த பயங்கரவாத குழு தெரிவித்துள்ளது. தலிபான்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய தமிழக போராளிகள் சீமான் தடா ஜெ ரஹீம் போன்றவர்கள் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக ஜ.எஸ்.., செயல்பட கூடாது என்று கூற முன்வருவார்களா என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நன்றி தினமலர்..