சியாலி ராமாமிர்தம் ரங்கநாதன் | Shiyali Ramamrita Ranganathan

சியாலி ராமாமிர்தம் ரங்கநாதன் | Shiyali Ramamrita Ranganathan

Share it if you like it

சியாலி ராமாமிர்தம் ரங்கநாதன் ஒரு கணிதவியலாளர் நூலக துறையின் ஜாம்பவான். சியாலி என்பது சீர்காழியின் பழைய பெயர். சென்னை மாகாணத்தின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் ஆகஸ்ட் 9,1892 அன்று ராமாமிர்தம் ஐயர் சீதாலட்சுமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் ரங்கநாதன்.

ஆறாம் வயதிலேயே தந்தையை இழந்த ரங்கநாதன் தன் தாத்தாவால் வளர்க்கப்பட்டார். ரங்கநாதனின் தாத்தா பள்ளி ஆசிரியர். அவருடைய தாத்தா மற்றும் அப்பள்ளியின் வேறு இரு ஆசிரியர்கள் ரங்கநாதனை வளர்த்தவர்களில் முக்கியமானவர்கள்.

ஹிந்து மதத்தில் தீவிர பற்று கொண்ட இவர்களால் ரங்கநாதன் வளர்க்கப்பட்டதால் ஹிந்து மத இலக்கியங்களில் தீவிர ஈடுபாடு கொண்டு விளங்கினார். ரங்கநாதனின் நூலக அறிவியலில் இந்து மத சாஸ்திரங்களில் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.

1924 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தின் நூலகர் ஆனார் ரங்கநாதன். செப்டம்பர் 1925 இல் லண்டன் சென்று நூலகம் சார்ந்த ஆறு மாத சான்றிதழ் பாடநெறியை மேற்கொண்டார். அப்போது பல நூலகங்களை பார்வையிட்ட அவர் புத்தகங்களின் வகைப்பாடுகள் மற்றும் அட்டவணைப்படுத்துதல் ஆகியவற்றை ஆய்வு செய்தார். நூலக நிர்வாகம் அமைப்பு ரீதியாக சரியில்லாமல் இருந்ததை உணர்ந்த அவர் அதனை மேம்படுத்த வாய்ப்பிருப்பதாக நம்பினார்.

1933 ஆம் ஆண்டு colon classification எனப்படும் பகுப்பாய்வு வகைப்பாட்டு கருத்தியலை முன்வைத்தார். அது ஹிந்து மத சாஸ்திரங்களில் அடிப்படையில் அமைந்திருந்தது. கணிதத்தின் புள்ளியியல் கோட்பாடுகளைக் கொண்டு Libametry எனும் நூலக செயல்பாட்டு முறையை உருவாக்கினார்.

1931 ஆம் ஆண்டு நூலக அறிவியல் துறையை சென்னை பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார். சென்னை பொது நூலக சட்டம் கொண்டு வர காரணமாக இருந்தார். இச்சட்டம் 1957 இல் அமலுக்கு வந்தது.

1925 ஆம் வரும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தின் பல்வேறு கூறுகளை துல்லியமாக சொல்லும் சங்கேத குறியீட்டு முறையை அவர் உருவாக்கினார்.அதற்கு கோலன் பகுப்புமுறை என்று பெயர். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை எந்த சிரமமும் இல்லாமல் மிக துல்லியமாக எடுப்பதற்கு இந்த கோலம் பகுப்பு முறை மிகவும் உதவியாக விளங்கியது.

உலகில் பல்வேறு முறைகளினால் நூலகங்களில் நூல்கள் வகைப்படுத்தப்படுகிறது. அவ்வாறு வகைப்படுத்தப்படும் பல்வேறு முறைகளில் டெசிமல் முறையும் கிழக்கத்திய நாடுகளில் டாக்டர் எஸ் ஆர் ரங்கநாதன் அவர்களின் கோலன் முறையும் சிறப்பானதாகும்.

தமிழகத்தைச் சார்ந்த இந்த பேரறிஞர் செய்த புரட்சி உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாட்டு மக்களால் போற்றப்பட்டு வருகிறது அதனால் நாட்டுக்கு பெருமை அளிப்பதாகும்.

டாக்டர் எஸ் ஆர் ரங்கநாதன் அவர்கள் சுமார் 42 ஆண்டுகளாக நூலகத் துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அதில் பல்வேறு பயிற்சிகள் செய்து நூலக துறையில் பல்வேறு பணி முறைகளை புகுத்தியவர்.

யுனெஸ்கோவின் ஆவண காப்பகம் புது தில்லியில் அமையும் காரணமாக இருந்தார் ரங்கநாதன் பனாரஸ் பல்கலைக்கழகம் மற்றும் தில்லி பல்கலைக்கழகம் ஆகிய நூலகங்களை சீரமைத்தார்.

நான்கு வருடங்களில் சுமார் ஒரு லட்சம் புத்தகங்களை வகைப்படுத்தினார். 1947 முதல் 1955 வரை தில்லி பல்கலைக்கழகத்தின் நூலக அறிவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றினார்.

பல்கலைக்கழக மானிய குழுவின் நூலக ஆணையர் தலைமை பொறுப்பையும் வகித்தார். இந்திய அரசு ரங்கநாதனை கௌரவிக்கும் வகையில் 1965 ஆம் ஆண்டு தேசிய ஆய்வு பேராசிரியர் இன்னும் பட்டத்தை வழங்கியது.

டாக்டர் ரங்கநாதன் நூலக அறிவியல் துறையில் ஐந்து விதிகளை உருவாக்கினார் :

  1. புத்தகங்கள் பயன்படுத்துவதற்காகவே.
  2. படிக்க விழையும் ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தகம் இருக்கிறது.
  3. ஒவ்வொரு புத்தகத்திற்கும் படிப்பவர்கள் உண்டு.
  4. படிப்பவர்களின் நேரத்தை வீணாக்க கூடாது.
  5. நூலகம் என்பது வளர்ந்து கொண்டே இருப்பது.

நூலக சேவையை இந்த ஐந்து விதிகள் மேம்படுத்துகின்றன நூலக அறிவியல் சார்ந்த டாக்டர் ரங்கநாதன் அவர்கள் சுமார் 1000 கட்டுரைகளையும் 50 புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

1935 ஆம் ஆண்டு தனது மிக முக்கிய புத்தகமான “நூலக நிர்வாகம்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். கோட்பாட்டு அளவில் நூலகத்தை ஆயிரம் கூறுகளாக பிரித்து இருந்தார். அவை நூலகத்தின் பல்வேறு செயல்பாடுகளை அடையாளப்படுத்தின. அதோட அல்லாமல் நூலக செயல்பாடுகளை அவை எளிமையாக்கின.

டாக்டர் ரங்கநாதனின் சாதனை குறிப்புகள் அனைத்தையும் இந்திய புள்ளியியல் துறையின் கீழ் பெங்களூரில் இயங்கும் ஆவண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் காணலாம்.

ரங்கநாதன் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் உலக அறிவியலுக்காக பணியாற்றினார் . அவருடைய 20 வருட சென்னை பல்கலைக்கழக பணிக்காலத்தில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாளைக்கு 16 மணி நேரம், வாரத்தில் 7 நாட்களும் உழைத்ததாக அவருடன் பணிபுரிந்தவர்கள் பதிவு செய்கிறார்கள்.

நூலகத்திற்குள் காலணி அணிய மாட்டார். காரணம் வீடுகளுக்குள் ஒருவரும் காலனி அணிவதில்லை நூலகம் எனது வீடு என்பாராம் டாக்டர் ரங்கநாதன்.

அவருடைய பணி ஓய்வு காலத்திற்குப் பிறகும் சர்வதேச அளவில் பல பொறுப்புகளை வகித்தார். தனது இறுதிக்காலம் அதாவது எண்பதாவது வயது வரை அவர் துறை சார்ந்த ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.

டாக்டர் ரங்கநாதன் உலக அறிவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். நாடுகளின் எல்லை கடந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் சர்வதேச அளவில் நூலக அறிவியல் சார்ந்த பல மாநாடுகளிலும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தி உள்ளார்.

தவிர ஐநாவில் நூலகத்தை நிறுவவும் சர்வதேச வரையறைகள் அமைப்பின் ஆவண நிர்வாகத்திற்கும் முக்கிய பங்காற்றி இருக்கிறார். 

1972 செப்டம்பர் 28 டாக்டர் ரங்கநாதன் மறைந்தார் .அவரை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கியது .அவர் நினைவாக ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்திய நூலகர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இவர் நூலக இயக்கத்தின் தந்தை. நூலக இயலுக்கு வடிவமைப்பு வழங்கியவர். நூலக துறையில் ஒரு விடிவெள்ளியாய் பிரகாசித்த அவர் அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமாக புத்தகப் பசியை மக்களிடம் தோன்றியவர். இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களிலும் நூலகம் அமைந்திட வேண்டும் என்று அரும்பாடுபட்டவர்.

அவருடைய பிறந்தநாளில் நூலகர் தினமாக கொண்டாடுவதோடு கடைக்கோடி கிராமம் வரை நூலக பயன்பாட்டை மக்களிடம் முழுமை அடைய செய்வோம்.

செல்வி.அனுகிரஹா


Share it if you like it