சிறைவாசிகள் – விடுவிக்கப்பட வேண்டியவர்களா?
தவறு செய்யும் மனிதர்களுக்கு தண்டனை வழங்குவது இயல்பு. ஒருவர் செய்யும் தவறுக்கு ஏற்ற வகையில், அவருக்கு தண்டனை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கிடைக்கக் கூடும். சில நேரங்களில், சிறிய வகையிலான குற்றம் புரிந்தோருக்கு, சில மாதங்கள் மட்டுமே, சிறை தண்டனை இருக்கும். பெரிய வகையிலான குற்றம் புரிந்தோருக்கு தண்டனையானது, சில, பல வருடங்களாக இருக்கலாம்.
மிகக் கொடூரமான குற்றம் செய்தவருக்கு, மரண தண்டனை கூட வழங்கப்பட நேரிடும். சில நேரங்களில், சிறையில் ஒருவர், நல்ல நடத்தையுடன் நடந்து கொண்டால், அவர், தான் விடுதலை அடையும் காலத்திற்கு முன்னரே, விடுதலை செய்யப் படலாம். அவ்வாறு, நிறைய சம்பவங்கள், நமது நாட்டில் நிகழ்ந்து உள்ளது.
இளம் வயதில் குற்றம் புரிந்தோருக்கு, கடும் தண்டனை வழங்கப் படாமல், அவர்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டு, பருவம் எய்திய உடன், விடுதலை செய்யப் படுவார்கள்.
தமிழகத்தில் உள்ள சிறைகளின் எண்ணிக்கை:
தமிழகத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் கீழ், 142 சிறைச் சாலைகள் உள்ளன. மொத்த அடைப்பு எண்ணிக்கை – 23,592, தற்போது இருப்பது – 14,596, சதவீதம் – 61.86%.
அவற்றில்,
மத்திய சிறைச் சாலைகள் – 9,
பெண்களுக்கான தனிச் சிறைகள் – 5,
மாவட்டச் சிறைகள் – 14,
ஆண்களுக்கான கிளைச் சிறைகள் – 89,
பெண்களுக்கான கிளைச் சிறைகள் – 7,
ஆண்களுக்கான தனிக் கிளைச் சிறை – 1,
பெண்களுக்கான தனிக் கிளைச் சிறை – 2,
கிளைச் சிறைகள் மற்றும் இளம் குற்றவாளிகள் சீர்திருத்த பள்ளிகள் – 12,
திறந்தவெளிச் சிறைச் சாலைகள் – 3
சென்னை ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டு வெடிப்பு:
1993 ஆம் வருடம், ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி, சென்னையில் உள்ள ஆர் எஸ் எஸ் அலுவலகத்தை, தடை செய்யப்பட்ட இயக்கமான “அல்-உமா” சேர்ந்த தீவிரவாதிகளால், குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. அதில், 11 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர். மேலும், பல அப்பாவித் தமிழர்கள் படுகாயம் அடைந்தனர். அந்த குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட “முஸ்தக் அஹமத்” என்ற குற்றவாளி, 24 வருடங்கள் கழித்து, 2018 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 9 ஆம் தேதி, கைது செய்யப் பட்டார்.
அவரை பிடித்துத் தருபவர்களுக்கு, 10 லட்சம் சன்மானம் என சிபிஐ அறிவித்த பிறகும், பிடிபடாமல் இருக்க முடிந்தது எப்படி? என்பது புரியாத புதிராகவே உள்ளது.
குற்றம் செய்த பின், 24 வருடங்களாக, தேடப்பட்டு வந்த, அந்த குற்றவாளிக்கு, அடைக்கலம் கொடுத்தது யார்? அவரை பாதுகாத்தது யார்? என்ற கேள்வி, மக்கள் மனதில் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறது.
12 வருடங்களாக நடந்த இந்த வழக்கில், 2007ஆம் ஆண்டு, “தடா” (TADA) நீதிமன்றம், வழக்கில் குற்றம் புரிந்தோருக்கு, தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.
சென்னை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு:
1995 ஆம் ஆண்டு, தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 ஆம் தேதி, தமிழர்களின் புனித நாளான, சித்திரை – 1 அன்று, சென்னையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில், குண்டு வைக்கப் பட்டது. அதில், அப்பாவி இரண்டு தமிழர்கள், படுகொலை செய்யப் பட்டனர். மேலும் சிலர், படுகாயம் அடைந்தனர். “காஜா நிஜாமுதீன்”, ஜாகீர் ஹுசைன்”, “ராஜா ஹூசைன்” என்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது.
1998 கோவை குண்டு வெடிப்பு:
பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக, கோயம்புத்தூர் வர இருந்த லால் கிருஷ்ண அத்வானியை குறி வைத்து, பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, 1998 ஆம் வருடம், கோவையில் குண்டு வைக்கப் பட்டது. அதில், 58 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர். பலருக்கும் மேற்பட்டோர், படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், “அல் உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷா” உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர்.
எந்த ஒரு மனிதர், தவறு செய்து இருந்தாலும், நிச்சயம் அவர், சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அவர், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நீதிமன்றம் முன்பு, தவறு செய்தவர், நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார் என்ற ஓரே காரணத்திற்காக, தண்டிக்கப் பட்டவர், விடுதலை செய்யப் பட்டால், தவறு செய்பவர்களுக்கு, நிச்சயம் அது, தூண்டு கோலாக அமையும் என்பதே, சட்ட வல்லுனர்களின் கருத்தாக இருந்து வருகின்றது.
தவறு செய்து சிறையில் அடைக்கப் பட்டவர்கள், தண்டனை காலத்திற்கு முன்னரே விடுதலை செய்யப் பட்டால், அது தவறான முன்னுதாரணமாக மாறி விடும் என, சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் உள்ளவை:
1. தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை
2. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (TMMK)
3. ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த்
4. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI)
5. இந்திய தவ்ஹீத் ஜமா அத் (ITJ)
6. சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI)
7. மனிதநேய மக்கள் கட்சி (MMK)
8. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML)
9. வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா
10. இந்திய தேசிய லீக்
11. அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்
12. தமிழ் மாநில தேசிய லீக்
13. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
14. இஸ்லாமியர் விழிப்புணர்வு கழகம்
15. ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் (அர்சத் மதனி)
16. ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் (மஹ்மூத் மதனி)
17. ஆல் இந்தியா மில்லி கவுன்சில்
18. தாருல் இஸ்லாம் பவுண்டேசன் ட்ரஸ்ட்
19. இஸ்லாமிய இலக்கிய கழகம்
20. ஐக்கிய சமாதான பேரவை
21. ஷரீஅத் பாதுகாப்பு பேரவை
22. அகில இந்திய தேசிய லீக்
2021 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 29 ஆம் தேதி, “தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு” தலைவர், மவ்லானா பி.ஏ. காஜா மொய்னுதீன் பாகவி அவர்களின் தலைமையில், தமிழக முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரிக்கை வைத்தனர். “ஒரு மதத்தை சேர்ந்தவர்” என்ற ஒரே காரணத்திற்காக, தண்டிக்கப் பட்டவர்கள் விடுதலை செய்யப் பட்டால், அது சட்டப்படி சரியானதா?
பசுவின் கோரிக்கையை ஏற்க, நீதி தவறாத தமிழக மன்னர் “மனுநீதிச் சோழன்”, தான் பெற்ற மகனை, தேரிட்டு கொன்றார். நெறி தவறாத மனுநீதிச் சோழனின் சிலை, சென்னை உயர்நீதி மன்றத்தில் வைக்கப் பட்டு உள்ளது. தர்மம் தவறாத தமிழக மன்னர்கள் வாழ்ந்த பூமியில், நீதி நிலை நாட்டப்படுமா? நம்புவோம்!
- அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai
உதவிய தளங்கள்:
https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-bomb-blast-accused-basha-wants-parole/