மாணவர்களின் மனதில் அவநம்பிக்கையை விதைக்கும் மூடர்களே ஷியாம் கிருஷ்ணசாமி விளாசல்…!

மாணவர்களின் மனதில் அவநம்பிக்கையை விதைக்கும் மூடர்களே ஷியாம் கிருஷ்ணசாமி விளாசல்…!

Share it if you like it

பல தரப்பு மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஆலோசனைக்கு பின்பே மத்திய அரசு நீட் தேர்வை நடைமுறைக்கு கொண்டு வந்தது. சமூக ஆர்வலர்கள், கல்வி ஆலோசகர்களின் பங்கு நீட் தேர்வில் மிக முக்கியமானது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான் நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பினை இன்று வரை தெரிவித்து வருகிறது.

படிப்பவர்களின் சதவீதம் மிக குறைவாக உள்ள மாநிலங்கள் கூட நீட் தேர்விற்கு தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கவில்லை என்பதை யாரும் மறந்து விட முடியாது.  தனியார் மருத்துவ கல்லூரி நடத்தும் பேராசை பிடித்த முதலைகளுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதே நீட் தேர்வை எதிர்ப்பதற்கு காரணம். இதற்கு சில அரசியல்வாதிகளும், பணத்தாசை பிடித்த நடிகர்களும் காரணம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி நேற்று அறிக்கை விட்ட நடிகருக்கு தனது எண்ணத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

மாணவர்கள் ஒரு தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் போது, தொடர்ந்து, அது கடினமான தேர்வு, சமூக அநீதி, குறிப்பிட்ட பிரிவினர் தேர்ச்சியே பெற முடியாது என்று அவர்கள் மனதில் அவநம்பிக்கையை விதைக்கும் மூடர்களே, மாணவர்களின் தவறான முடிவுகளுக்கு காரணம். இந்த சாபக்கேடு தமிழகத்தில் மட்டுமே..

 

Image

 


Share it if you like it