பாகிஸ்தான் பிரதமரை அண்ணன் என்று கூறிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்துவின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் முதல் அந்நாட்டின் ஊடகங்கள், பத்திரிக்கைகள், பிரதமர், அதிபர், கொண்டு அனைவருமே இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து வன்முறை போக்கையே இன்று வரை கடைபிடித்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மை.
இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய, கொடூர சம்பவம் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் மக்களுக்கு இந்தியா உதவ நினைத்தாலும் அந்நாட்டு ஆட்சியாளர்கள் இந்தியாவை வீழ்த்தவே ஒவ்வொரு கனமும் சிந்தனை செய்து வருகின்றனர் என்பது நிதர்சனம்.
இந்நிலையில்., காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சித்து அவர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை எனது பெரிய அண்ணன் என்று கூறியிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை வெறுக்கும் இம்ரான் கானை அண்ணன் என்று அழைக்கும் சித்து, ஒருவேலை பஞ்சாப் முதல்வார் ஆகி விட்டால் நாட்டின் நிலைமை என்னவாகும்? என்பதை அறிவார்ந்த இந்தியர்கள் இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும்.