சில தினங்களுக்கு முன்பு பெரம்பலுார் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மலை கோவிலான செல்லியம்மன், பெரியசாமி கோவிலை மர்மநபர்கள் தாக்கி அங்குள்ள சிலைகளை உடைத்தனர். இச்சம்பவத்திற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தாலும். தொடர்ச்சியாக அக்கோவில் மீது தகித்தல்கள் நடந்துகொண்டே இருந்தது.
“மனநிலை சரியில்லாத யாராவது செய்திருக்கக்கூடும்” என போலீசார் தரப்பில் அசால்ட்டாக பதில் வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. அவ்வளவு உயரமான சாமி சிலையை தரைமட்டமாக்கியது யாரோ மனநிலை சரியில்லாதவர் என்றால் குழந்தை கூட நம்பாது. இதற்கு பின்னால் சிலை உடைப்பில் கைதேர்ந்த ஒரு கும்பலே இருக்க கூடும் என பலர் சந்தேகித்து வருகின்றனர்.
முன்னதாக ஆந்திர மாநிலத்தில் பலநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்தர்வேதி ஆலய தேர் தீவைப்பு விவகாரத்தில் யாகூப் அலி என்பரை கைது செய்யப்பட்டார். ஆனால் அவரும் மனநிலை சரி இல்லாதவர் என கூறப்பட்டது.
அடுத்து தமிழகத்தில் அரியலூர் மாவட்டம், வி.களத்தூர் கிராமத்தில் உள்ள கோவில் தேரை முஹம்மதுகாணி என்பவர் தீவைக்க முயற்சித்து பொதுமக்களிடம் மாட்டிக் கொண்டபின் பொழுது போக்கிற்காக கொலுத்த வந்தேன் என தெனாவட்டாக பதிலளித்தார். பின்னர் அவரும் மனநிலை சரியில்லாதவர் என வாதந்திகள் பரப்பப்பட்டது.
மேற்கண்ட சம்பவங்களில் இருக்கும் ஒற்றுமையை பார்க்கையில் சிறுவாச்சூர் கோவில் விவகாரத்திலும் மிக பெரிய சதி திட்டம் ஒருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. தென் மாநிலங்களில் ஹிந்து கோவில்கள் அதிகம் தாக்கப்படுவதும். அந்த வழக்குகள் கிடப்பில் போடப்படுவதும். அப்படியே யாராவது கைது செய்யப்பட்டால் அவரும் மனநிலை சரியில்லாதவர் என சாக்கு போக்கு சொல்லப்படுவது வாடிக்கையாகி வருகிறது. எனவே இவ்விவகாரத்தில் நேர்மையான விசாரணை வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் வருகின்றனர்.