பாதை மாறும் சிறுவர்கள்… எங்கே செல்கிறது தமிழகம்?

பாதை மாறும் சிறுவர்கள்… எங்கே செல்கிறது தமிழகம்?

Share it if you like it

போதை வஸ்துக்களால் சீரழியும் இளைய சமுதாயம் வைரலாகும் காணொளி.

ஆண்கள் மட்டுமே குடித்து வந்த பீடி, சிகரெட் மற்றும் மது வகைகளை தற்பொழுது பெண்களும் சுவைக்க ஆரம்பித்து இருக்கும் சம்பவம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கல்லூரி மாணவ மாணவிகளையும் கடந்து தற்பொழுது பீடி, சிகரெட் போன்ற போதை வஸ்துக்களை பள்ளிக்கு செல்லும் சிறுவர்களும் பயன்படுத்த ஆரம்பித்து இருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பள்ளி செல்லும் வயதில் உள்ள 6 சிறுவர்கள் தனிமையான இடத்தில் ஒன்றாக அமர்ந்து இருக்கின்றனர். அதில், ஒரு சிறுவன் கஞ்சா போன்ற ஏதோ ஒரு போதை பொருளை கையில் வைத்து கசக்குகிறான். மற்றொரு சிறுவன் பீடியை இழுப்பது போன்று அந்த போதை வஸ்துவதை இழுத்து விட்டு தனது நண்பன் வாயில் வைப்பது போன்று இச்சம்பவம் அமைந்து இருக்கிறது. இதனை, அருகில் இருந்த சிறுவன் ஒருவன் வீடியோவாக எடுத்து இருக்கிறான். எப்படியோ இக்காணொளி வெளியாகி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ என்று எடுக்கப்பட்டது என சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால், எதிர்கால இளைய சமுதாயம் இனிமேல் தவறான பாதைக்கு செல்ல கூடாது என்ற விழிப்புணர்வுக்காக மட்டுமே இந்த பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it