ஐ.நா. பொதுச்சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய – சினேகா துபே..!

ஐ.நா. பொதுச்சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய – சினேகா துபே..!

Share it if you like it

370-வது சட்ட பிரிவை இந்தியா காஷ்மீரில் இருந்து நீக்கிய பின்பு தற்பொழுது அங்குஉள்ள மக்கள் அமைதி காற்றை சுவாசிக்க துவங்கியுள்ளனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான், சீனா, துருக்கி மற்றும் உள்ளூர் போராளிகள் முதல் பிரிவினையை தூண்டும் அரசியல்வாதிகள் வரை பலர் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவு கரம் நீட்டுவது போல் இச்சமயம் வரை பேசி வருவதை இந்திய மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர் என்பது நிதர்சனம்.

இச்சூழ்நிலையில் ஜ.நா பொதுச் சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் இம்ரான் கான் பேசி காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து பேசிய ( Indian Diplomat ) இந்தியாவின் முதன்மை செயலர் சினேகா துபே அவர்கள் பிரதமர் இம்ரான் கானையும் அந்நாட்டின் சூழ்ச்சிகளையும் ஆணித்தரமான கருத்துக்கள் மூலம் வெளுத்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it